என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி லாரியில் கடத்தப்பட்ட வேலிக்கற்கள் பறிமுதல்
- தப்பி ஓடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- லாரியை பறிமுதல் செய்த போலீசார் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் டோல்கேட் பகுதியை அருகே வாகன சொஅதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை ஒட்டி வந்த ஆசாமிகள் அதிகாரிகளை கண்டவுடன் லாரியைநிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து லாரியை சோதனை செய்தபோது அதில் அரசு அனுமதியின்றி வேலிக்கற்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Next Story






