என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்பாட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம்.
சூளகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்
- புதிய ஒய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஒய்வூதியத் திட்டத்தை திரும்ப பெறுதல், உறுதியளித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்கப்படாதது அதிருப்தியை விதைத்துள்ளது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் அன்பரசு, மண்கலப்பாண்டியன், வாசுகி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






