என் மலர்
கிருஷ்ணகிரி
- 170 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை உதவி வேளாண்மை அலுவலர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
மத்தூர்,
ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளியில் வேளாண்மை துறை சார்பில் விவசாகு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்சியில் ஊத்தங்கரை உதவி வேளாண்மை அலுவலர் நந்தகுமார் தலைமையில், விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்க மாநில துணைத் தலைவர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, 170 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
இதில் விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் அருள், மாவட்ட பொருளாளர் அண்ணாமலை,மாவட்ட துணைத்தலைவர் தீர்த்தகிரி,மாவட்டச் செயலாளர் ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- நொச்சிப்பட்டி -கல்லாவி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, நொச்சிப்பட்டி கிராமத்தில், நூறு நாள் வேலை திட்டத்தில், முறைகேடு நடப்பதை கண்டித்தும்முறையான வேலை வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நொச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பகுதி பெண்கள் நொச்சிப்பட்டி -கல்லாவி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து .தகவலறிந்து வந்த, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.
- இருதரப்பிரும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர்.
- 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள வடமலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானேஸ்வரன் (வயது65). இவருக்கும் இவரது தம்பி வெங்கடாசலம் என்பவருக்கும் இடையே வழிப்பாதை பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஞானேஸ்வரன், வெங்கடாசலம் ஆகிய இருதரப்பிரும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் இருதரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஞானேஸ்வரன், ரஜினி, சந்தோஸ், சரவணன், சக்திவேல், வினோத்குமார் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி பீரோவையும் உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருடியுள்ளான்.
- அதே பகுதியில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்தவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகனூர் பகுதியை சேர்ந்தவர் குரியன் மேத்யூ (40). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். கடந்த 18-ந்தேதி இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி பீரோவையும் உடைத்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.29,000 பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.
இது குறித்து குரியன் பாகனூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்துவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாதிக் உசேன் லக்கர் (29) என்பவர்தான் குரியன் வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- மஞ்சள் பை 46 அடி உயரமும், 20 அடி அகலம், ஆயிரத்து 50 மீட்டர் மஞ்சள் துணியால் தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ளது.
- மாங்கனி கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் இந்த மெகா சைஸ் மஞ்சள் பையைப் வியப்புடன் பார்த்து செல்பி எடுத்துக் செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனி கண்காட்சி யில் நகர்மன்ற தலைவர் ஏற்பாட்டின் பேரில் மெகா சைஸ் மஞ்சள் பை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மஞ்சள் பை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் கடந்த ஆறு மாதங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கிருஷ்ணகிரி நகர் மன்றத் தலைவர் பரிதா நவாப், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாலையோரக் கடைகள், தள்ளு வண்டிகள், காய்கறிக் கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, அதற்கு மாற்றாக மஞ்சள் பையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. இக்கண்காட்சியின் நுழைவு வாயிலில், நகர்மன்ற தலைவர் ஏற்பாட்டின் பேரில், மெகா சைஸ் மஞ்சள் பை வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் பை 46 அடி உயரமும், 20 அடி அகலம், ஆயிரத்து 50 மீட்டர் மஞ்சள் துணியால் தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ளது.
மாங்கனி கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் இந்த மெகா சைஸ் மஞ்சள் பையைப் வியப்புடன் பார்த்து செல்பி எடுத்துக் செல்கின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பொழுது போக்கு நிகழ்ச்சியில், பொதுமக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த மெகா சைஸ் மஞ்சள் பை அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பி டத்தக்கது.
- ஒரு குட்டியனை உட்பட நான்கு யானைகள் நேற்று இரவு நேரத்தில் உணவு தேடி காப்புக்காட்டை விட்டு வெளியேறி தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தது.
- ஒரு கார் யானையை கடந்து செல்ல முயன்றபோது அந்த காரை யானை பின் தொடர்ந்து சிறிது தூரம் துரத்திச் சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா வனச்சரகம் குந்துக்கோட்டை காப்புக்காட்டில் கடந்த சில நாட்களாக யானைகள் சுற்றி வருகிறது.
இதில், தனியாக பிரிந்த ஒரு குட்டியனை உட்பட நான்கு யானைகள் நேற்று இரவு நேரத்தில் உணவு தேடி காப்புக்காட்டை விட்டு வெளியேறி தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை சிறிது தூரத்தில் நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில், குட்டியுடன் சேர்ந்து மூன்று யானைகள் வனப்பகுக்குள் சென்ற நிலையில், ஒற்றை யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையிலே நின்றபடியே இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
இதைத் தொடர்ந்து ஒரு கார் யானையை கடந்து செல்ல முயன்றபோது அந்த காரை யானை பின் தொடர்ந்து சிறிது தூரம் துரத்திச் சென்றது. இதனால், காரில் இருந்த நபர்கள் அச்சம் அடைந்தனர்.
யானை காரை துரத்தும் காட்சியை காரில் இருந்தவர்கள் தங்களின் கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிதானமாகவும், கவனத்துடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறித்தியுள்ளனர்.
- எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
- 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தென்றல் நகர் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்துள்ளனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது பற்றி ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர்.
அப்போது மர்ம நபர்கள் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அலாரம் சத்தம் போட்டதால் அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.
கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை பார்வையிட்ட போது நள்ளிரவு 2 மணியில் இருந்து 4 மணி வரை ஏ.டி.எம். எந்திரத்தை 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
முதலில் ஏடிஎம்-இல் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை செயலிழக்கச் செய்து பின்னர் உள்ளே சென்று ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.
எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
- மாங்கனி கண்காட்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
- 62 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 475 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படவில்லை. இவ்வாண்டு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில், 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்று தொடங்கியது.
இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து, மா அரங்கு, காவல்துறை சார்பில் துப்பாக்கிகள் கண்காட்சி உட்பட அனைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து 62 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 475 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இக்கண்காட்சியில் மா போட்டி அரங்கில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நீலேஷ்வரி, சாந்தி மல்கோவா, பாகில்வான், மஞ்சீரா, அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு ரக மாங்கனிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 12 வகையான மாபழங்களும், ஆந்திரா 24, கர்நாடகா 16, தெலுங்கானாவில் இருந்து 20 வகையான மாங்கனிகள், ஐ.ஐ.எச்.ஆர் இருந்து 84 வகையான மா வகைகள் காட்சிப்ப டுத்தப்பட்டிருந்தது. மா மூலம் செய்யப்பட்டிருந்த இனிப்பு, காரவகைகள் இடம் பெற்றிருந்தது.
இதே போல் 44 அரசு பண்ணைகளில் விளைக்கப்பட்டிருந்த மா உரிய விவரங்களுடன் வைக்கப்பட்டிருந்தது. மேலும், தோட்டக்க லைத்துறை சார்பில் பார்வையாளர்களை கவரும் வகையில் மலர்கள் மூலம் மாம்பழம், கிருஷ்ணகிரி அணை, மாம்பழக்கூடையும், காய்கறிகள் மூலம் அண்ணா, கலைஞர், முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவியங்களும், புலி, முதலை, கொக்கு உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டிருந்தது.
கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பிகள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செங்குட்டுவன், முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, பி.டி.ஏ தலைவர் நவாப், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
- குடிமகன்கள் குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கள்ளத்தனமாக மது விற்ற பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காவேரிபட்டணம்,
நேற்று காலை காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சந்து கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது அப்பகுதி மக்கள் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்கள் கூறும்போது இங்கு கள்ளத்த னமாக மது விற்பனை செய்கிறார்கள். இதனால் இப்பகுதியில் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடவேண்டியுள்ளது. குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கள்ளத்தனமாக மது விற்பதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். காவேரிப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி அப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்ற பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர்.
- வாகன சோதனையில் போது சிக்கினார்.
- 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் புளியரசிமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 450 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 லட்சத்து89 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது36) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
- பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதி தப்பியோட்டம்.
- 1 லட்சத்திற்கு 5 லட்சம் கேட்டுள்ளதால் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிப்பதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்பிகா. இவர் அதே பகுதியை சேர்ந்த இளவரசன் (30), இவரது சித்ரா ஆகியோரிடம் கடந்த 2018-ம் ஆண்டு வட்டிக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் அந்த பணத்திற்கு வட்டியும், முதலும் அம்பிகா கொடுக்காமல் இருந்து வந்தார். அதனால் வாங்கிய பணம் எல்லாம் சேர்த்து ரூ.5 லட்சமாக தர வேண்டும் என்று சித்ரா தனது கணவருடன் சென்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து அம்பிகா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இளவரசன், சித்ரா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது நடந்த விபத்து.
- பைக்கில் இருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்த பரிதாபம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திகானபள்ளி பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது65). இவர் இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாம்ராஜ்நகர் அருகே வந்த போது அவர் எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிேலயே முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






