என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி
  X

  மாங்கனி கண்காட்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்.பிரகாஷ், மதியழகன் உள்பட பலர் உள்ளனர்.

  கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாங்கனி கண்காட்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
  • 62 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 475 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படவில்லை. இவ்வாண்டு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில், 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்று தொடங்கியது.

  இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து, மா அரங்கு, காவல்துறை சார்பில் துப்பாக்கிகள் கண்காட்சி உட்பட அனைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

  இதனைத் தொடர்ந்து 62 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 475 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இக்கண்காட்சியில் மா போட்டி அரங்கில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நீலேஷ்வரி, சாந்தி மல்கோவா, பாகில்வான், மஞ்சீரா, அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு ரக மாங்கனிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 12 வகையான மாபழங்களும், ஆந்திரா 24, கர்நாடகா 16, தெலுங்கானாவில் இருந்து 20 வகையான மாங்கனிகள், ஐ.ஐ.எச்.ஆர் இருந்து 84 வகையான மா வகைகள் காட்சிப்ப டுத்தப்பட்டிருந்தது. மா மூலம் செய்யப்பட்டிருந்த இனிப்பு, காரவகைகள் இடம் பெற்றிருந்தது.

  இதே போல் 44 அரசு பண்ணைகளில் விளைக்கப்பட்டிருந்த மா உரிய விவரங்களுடன் வைக்கப்பட்டிருந்தது. மேலும், தோட்டக்க லைத்துறை சார்பில் பார்வையாளர்களை கவரும் வகையில் மலர்கள் மூலம் மாம்பழம், கிருஷ்ணகிரி அணை, மாம்பழக்கூடையும், காய்கறிகள் மூலம் அண்ணா, கலைஞர், முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவியங்களும், புலி, முதலை, கொக்கு உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டிருந்தது.

  கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினர்.

  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பிகள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செங்குட்டுவன், முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, பி.டி.ஏ தலைவர் நவாப், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

  Next Story
  ×