என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
- எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
- 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தென்றல் நகர் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்துள்ளனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது பற்றி ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர்.
அப்போது மர்ம நபர்கள் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அலாரம் சத்தம் போட்டதால் அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.
கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை பார்வையிட்ட போது நள்ளிரவு 2 மணியில் இருந்து 4 மணி வரை ஏ.டி.எம். எந்திரத்தை 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
முதலில் ஏடிஎம்-இல் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை செயலிழக்கச் செய்து பின்னர் உள்ளே சென்று ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.
எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.






