என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
- கோவிலில் ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டது.
- அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த செங்கல்தோப்பு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று கோவில் புன்னியாதானம் செய்தல் மற்றும் அம்மன் அலங்காரம் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று பிற்பகல் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.
இதில் துர்க்கை அம்மன் அலங்காரத்துடன், மேளதாளங்கள் முழங்க, கரகம் விளை யாடுதல் நிகழ்ச்சியுடன், மெட்பண்டா, மேல்சோ மார்பேட்டை, லைன்கொ ல்லை, கீழ்சோ மார்பேட்டை, மோட்டூர், பூசாரிப்பட்டி, சின்னதா ளாப்பள்ளி, கிருஷ்ணபுரம், கீழ்புதூர், மேல்புதூர், பெருமாள் நகர், மேல்பட்டி, சிப்பாயூர், பள்ளித்தெரு, லண்டன்பேட்டை நாயுடு தெரு, பாஞ்சாலியூர், ஒண்டியூர், எம்ஜிஆர் நகர் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.
அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவினையொட்டி 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டது. விழாவினையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






