என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒசூர், ராம்நகர் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை கழிவுநீர் கால்வாயுடன் இணைக்க புதிய திட்டம்- மேயர் சத்யா நேரில் ஆய்வு
- தொடர்மழையால் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்று பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
- மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ராம்நகர் பகுதிகளில் தொடர்மழையால் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்று பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த மழைநீரை பழைய பெங்களூர் சாலையில் உள்ள பேருந்து பணிமனையிலிருந்து, கழிவுநீர் கால்வாய் மூலம் ஏ.எஸ்.டி.சி ஹட்கோ பகுதியில் கால்வாய்களுடன் இணைப்பதற்கான திட்டம் குறித்து மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கட்சியினர், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story






