என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரை திருடி சென்ற அரிப் அலி மற்றும் முஷ்ரப்
ஓசூர் அருகே காரை திருடிச் சென்ற 2 பேர் அதிரடி கைது
- போலீசார் மத்திகிரி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற ஒரு காரையும் கைப்பற்றினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையை தடுப்பதற்காக மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாக்கூர் உத்தரவுப்படி, ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் நேரடி மேற்பார்வையில் மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் சிற்றரசு, பூபதிராமராஜு மற்றும் போலீசார் மத்திகிரி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குருபட்டியை சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் அரிப் அலி (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அம்ஜத் என்பவரது மகன்முஷ்ரப் (22) ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற ஒரு காரையும் கைப்பற்றினர். மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.






