என் மலர்
கிருஷ்ணகிரி
- கோபித்துக்கொண்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள சின்னாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கண்ணகி (50). கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என்று பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது மகன் தியாகராஜன் தந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கண்ணகியை தேடி வருகின்றனர்.
இதேபோல தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சாத்தனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்ப என்ற போர்வெல் ஆ பரேட்டர் குடும்பத்தகராறில் வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெங்களூருவை சேர்ந்த அவத்து க்குடும்பத்தினர் தந்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்த வகையில் பெங்களூர் ரோடு பகுதியை சேர்ந்த சுதன்குமார் என்பவரது மகன் விஜய்(17) தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் வீட்டில் திட்டியுள்ளார். இதையடுத்து விஜய் எங்கோ சென்று விட்டார். இது குறித்து பெறப்பட்ட புகாரின்பேரில் ஹட்கோ போலீ சார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
- ஆகஸ்ட் மாதம் மாநில தேர்தல் பொதுக்குழு மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக நடக்க உள்ளது.
- எங்கள் துறையைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், எந்த நலத்திட்ட உதவிகளும் உயர்த்தப்படவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், பொன்குமார் இளைஞர் அணி சார்பில், கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை.மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆஞ்சப்பா, பொன்குமார் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட இணை தலைவர் சர்தார், மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாசன், தருமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராகவரஜினி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் அழகேசன், இணை பொதுச் செயலாளர் ஜெகதீசன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் பிரபு, மாநில துணைத் தலைவர் முருகன் ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் பொன்.குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்கட்சி தேர்தல்கள் நடந்து வருகிறது.
கிளைத் தேர்தல்கள், ஒன்றியத் தேர்தல்கள் முடிந்து தற்போது மாவட்ட தேர்தல்கள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் மாநில தேர்தல் பொதுக்குழு மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக நடக்க உள்ளது.
எங்கள் துறையைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், எந்த நலத்திட்ட உதவிகளும் உயர்த்தப்படவில்லை. மாறாக 5 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் கேட்பு மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு கிடந்தது. தற்போது தமிழக முதல்வரின் ஆலோனைப்படி 4 லட்சம் கேட்பு மனுக்கள் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.400 கோடி அளவிற்கு ஓராண்டு காலத்தில் தொழிலாள ர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்ப ட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றைத் தலைமைக்கு தகுந்த நாயகர்.
- தமிழகத்தில் மீண்டும்அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்,
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஓசூரில் நடைபெற்றது. ஓசூர், பாகலூர் சாலையில், ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.சி.வி.ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணைசெயலாளர் மதன், பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கட்சி செயல்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணரெட்டி,அ.தி.மு.க.தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றைத் தலைமைக்கு தகுந்த நாயகர் என்றும் முடிவு செய்துள்ளனர். பொதுமக்களும் இதனையே விரும்புகின்றனர். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறப்பான ஆட்சியை தந்துள்ளது, தமிழகத்தில் மீண்டும்அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமையவேண்டும் என்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.
அந்தவகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், கட்சியின் ஒற்றைத் தலைமை சாமானிய நாயகர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- இவருக்கு கடன் தொல்லை அதிகம் இருந்துள்ளது.
- தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெரியமோட்டூர் பகுதியை சேந்தவர் பெருமாள்.இவரது மகன் வாஜ்பாய் (26). டிரைவர் தொழில் பார்த்துவரும் இவருக்கு கடன் தொல்லை அதிகம் இருந்துள்ளது. இதில் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சாலையை ஆக்கிரமித்து போர் போடுவதாக காவேரிப்பட்டணம் பேரூராட்சி ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது.
- இவர்கள் அனுமதி வாங்கவில்லை.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கோவிந்த செட்டி தெருவில் பக்கம் ஒரு சந்து உள்ளது. அந்த சந்தில் நேற்று காலை சாலையை ஆக்கிரமித்து போர் போடுவதாக காவேரிப்பட்டணம் பேரூராட்சி ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த பேரூராட்சி ஊழியர்கள் சாலையை ஆக்கிரமித்து போர் போடு வதை பார்த்து உடனடியாக நிறுத்துமாறு தெரிவித்தனர்.
மேலும் அங்கு போர் போடுவதற்கு அமைத்திருந்த பைப்புகள், டிரில் பிட், சுத்தியல், கடப்பாரை, உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது காவேரிப்பட்டணம் பேரூராட்சி எல்ட்பலைக் குட்ட பகுதிகளில் போர் அமைக்க பேரூராட்சி அனுமதி வாங்க வேண்டும்.
இவர்கள் அனுமதி வாங்கவில்லை. இதனால் போர் போட்டவர்கள் மீதும் போர் அமைக்க வந்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- கடந்த 4 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றிய எடப்பாடி கே.பழனிச்சாமி.
- ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை தேவை என்ற கருத்தை வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றிய எடப்பாடி கே.பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களின் அனை வரின் ஒத்துழைப்போடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ ரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கட்டப்பன், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன்,சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன்,பையூர் ரவி, ராமமூர்த்தி, வேங்கன், வேடி, சக்ரவர்த்தி, தேவராசன், முருகன், வெங்கடாசலம், நகர செயலாளர் கேசவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தங்கமுத்து,முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு ,பேரூர் கழக செயலாளர்கள் விமல், சிக்னல் ஆறுமுகம்,மாவட்ட துணை செயலாளர் ஷாகுல் அமீது, மாவட்ட நிர்வாகிகள்,மற்றும் அனைத்து சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 7 கல்குவாரிகளில் பாறைகளை வெடிவைத்து வெடிப்பதால் அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிச்சல் ஏற்படுகிறது.
- பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு புழுதி படிவதால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள முறையற்ற கல் குவாரிகளை நிரந்தரமாக மூடக்கோரி பா.ஜ.க. சார்பில் தேன்கனி கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளி ஒன்றிய தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். அமைப்பு சாரா மாநில துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட துனைதலைவர் சீனிவாச ரெட்டி, பொதுச் செயலாளர்கள் மனோகரன், அன்பரசன், விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவி மஞ்சுளா, மாவட்ட மகளிர் செயலாளர் வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இவை அனைத்தும் சட்ட விரோதமாக அதிக அளவில் கிரானைட் கற்கள் மற்றும் ஜல்லிகற்களை அதிக அளவில் வெட்டி எடுத்து சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்ட கிரி கிராமத்தை சுற்றி லும் இயங்கிவரும் 7 கல்குவாரிகளில் பாறை களை வெடிவைத்து வெடிப்பதால் அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிச்சல் ஏற்படுகிறது.
பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு புழுதி படிவதால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிறந்தரமாக முட வேண்டும் இல்லையென்றால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களை திரட்டி நெடுஞ்சாலையில் மறியல் நடைபெறும் என கூறினர்.
- மாணவி நித்திஸ்வரி 500-க்கு 444 முதல் மதிப்பெண் பெற்று சாதனை.
- ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள ஆலேரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் மாணவி நித்திஸ்வரி 500-க்கு 444 முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
இதையடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
- தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
- பட்ஜெட்டில் 30 சதவிகிதம் நிதி ஒதுக்குகிறார்கள்.தமிழகத்திலே 17 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறார்கள்.
ஓசூர்,
ஓசூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் அடுத்த ( ஜூலை) மாதம் 5-ம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு ராம கவுண்டர், பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தெலுங்கானா மாநி லத்தில் வேளாண்மைக்காக, பட்ஜெட்டில் 30 சதவிகிதம் நிதி ஒதுக்குகிறார்கள்.தமிழகத்திலே 17 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறார்கள் 30% தமிழகத்திலே ஒதுக்கினால் சிறப்பான வேளாண்மை வளர்ச்சி ஏற்படும்.
தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சில மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என தெரிகிறது. அவர்களுடைய ஒத்துழைப்பை பெறுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். மேலும் இந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர் வண்ணப்பா, பொருளாளர் சுப்பிரமணிய ரெட்டி மற்றும் நிர்வாகிகள் சர்வேஷ் ரெட்டி, நாகராஜ் ரெட்டி, நரசிம்மரெட்டி, சந்திரா ரெட்டி கிருஷ்ணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தற்போதைய தி.மு.க. அரசை எதிர்க்க ஒற்றை தலைமை இருந்தால் தான் அ.தி.மு.க. வலுவான எதிர்கட்சியாக செயல்படும்.
- பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு கையெழுத்திடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
பி.பார்மில் கையெழுத்திடுவது தொடர்பாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த கையெழுத்தையும் போடக்கூடிய தார்மீக பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்.
காரணம் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு பொதுக்குழு, செயற்குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அந்த கூட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடாது.
குறிப்பாக அந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் 23 தீர்மானங்களுக்கு மேல் வேறு எதையும் விவாதிக்க கூடாது என்றும் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அவர் அணுகியது, கட்சி கட்டுபாட்டை மீறிய செயல்.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது என்பதை கவனித்து ஆலோசனை வழங்க வேண்டும். எதிராக செயல்படக்கூடாது. கட்சியின் பொதுக்குழு அதே நாளில் திட்டமிட்டப்படி நடைபெறும்.
கட்சியில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 70 பேரும், 66 எம்.எல்.ஏ.க்களில் ஓ. பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய 3 பேர் தவிர 63 பேரும், தலைமை கழக நிர்வாகிகளில் 74-ல் 70 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களில் 2685 பேரில் 2582 பேர் உள்பட 99 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை ஆதரிக்கிறார்கள்.
எதிர்கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். தி.மு.க.வை பரமவிரோதி என்று ஜெயலலிதா கூறினார்.
ஆனால் பன்னீர்செல்வத்தின் தற்போதைய செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே வலுவான கட்சிகள்.
தற்போதைய தி.மு.க. அரசை எதிர்க்க ஒற்றை தலைமை இருந்தால் தான் அ.தி.மு.க. வலுவான எதிர்கட்சியாக செயல்படும்.
பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் இருந்து உணவகம் சரியான முறையில் செயல் படுவதில்லை.
- இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ள குட்டை கிராமத்தில் பெங்களூர் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் உள்ளது.
இவ்வழியாக செல்கின்ற பேருந்துகள் இந்த ஓட்டலில் நிறுத்தி பயணிகள் மற்றும் ஓட்டுனர் நடத்துனர் உணவருந்தி செல்வது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் இருந்து உணவகம் சரியான முறையில் செயல் படுவதில்லை. இந்த நிலையில் அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது .தீவிபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்தது.
இதனால் சுமார் 50,000ஆயிரம் பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வராஜ் நேரில் சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- கடந்த 15-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி போலீசார் தீவிர சோதனையில் இருந்தபோது ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
- சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதேப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி வீட்டின் முன்பு குவிந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் என்பவர்கள் மாத ஏல சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்களிடம் வேப்பனப்பள்ளி கிருஷ்ண கிரி பாகலூர்,பேரிகை,ஓசூர் மற்றும் கர்நாடக ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் இவர்களிடம் பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் இருவரும் சுமார் 25 கோடி ரூபாய் பணம் மோசடி செய்து தலைமறைவாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட வர்கள் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து வேப்பனப்பள்ளி போலீசார் கிருஷ்ணமுர்த்தி மற்றும் முனிரத்தினம் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர இருவரையும் தேடி வந்தனர்.இதையடுத்து கடந்த 15-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி போலீசார் தீவிர சோதனையில் இருந்தபோது ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து விசாரணைக்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வந்தனர்.
கடந்த 10 நாட்களாக கிருஷ்ணமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில் ஏலசீட்டு நடத்திய முக்கிய ஆவணங்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள், லேப்டாப் ஆகியவற்றை பொருளாதார குற்ற பிரிவு போலிசார் கைப்பற்றினர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் சோதனை பற்றி அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதேப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் மாதேப்பள்ளி கூட்டுரோடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த வேப்பனப்பள்ளி போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.






