என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • காது கேளாதோர் சங்கம் சார்பில் போராட்டம்நடந்தது.
    • கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் 19 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பலராமன், பொருளாளர் கோவர்தனன், மக்கள் தொடர்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொழி பெயர்ப்பாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

    இதில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் காது கேளாதோரை அலைக்கழிக்கக்கூடாது. அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் 1 சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்க உடனே முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகை ரூ.1500-ஐ, ரூ.3 ஆயிரமாக உயர்த்தித்தர வேண்டும்.

    வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் பிரதி நிதிகளை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். கொக்கோகோலா நிறுவனங் களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையைத் தூக்கி சைகையில் கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் கம்யூனிஸ்ட் தலைவர் பேட்டியளித்தார்.
    • அடுத்த தேர்தலில் மோடி தோற்பார் என்று கூறினார்.

    ஓசூர்,

    சி.பி.ஐ. கட்சியின் ஓசூர் நகர 24-வது மாநாடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய பாஜ.க.அரசு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற சர்வாதி காரத்தின் மீது நம்பிக்கை கொண்ட, பாசிசத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசாக இருந்து வருகிறது.

    வருகிற 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் மோடி ஆட்சியை நிராகரிப்பார்கள். அதற்குண்டான அனைத்து பணிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செயல்படுத்தும்.

    மோடி ஆட்சியில் தளபதிகள் அரசியல் பேசத்தொடங்கியிருப்பது, நாட்டுக்கும், ஜன நாயகத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். அக்னி பத் திட்டத்தால் இளை ஞர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். அவர்களின் எதிர்கால வாழ்வுரிமை பறிக்கப்படும். எனவேதான் இத்திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் போராடி வருகின்றன. இளைஞர்களும் போராடு கின்றனர்.

    ஆனால் மத்திய அரசு, முறையாக போராட்டத்தை அமைதிப்படுத்தாமல் போராட்டத்தில் ஈடு படும் இளைஞர்களை கடுமையாக அச்சுறுத்தி ராணுவ தளபதிகள் மூலம் பேட்டியளிக்க வைத்திருப்பது ஏற்புடை யதல்ல. ஜனநாயகத்திற்கும் இது நல்லதல்ல.

    குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் பாதுகாவலர். அவ்வாறு பாதுகாப்பதில் திரவுபதி முர்மு பொருத்தமானவரா அல்லது யஷ்வந்த் சின்கா பொருத்தமானவரா என்பதை, பா.ஜ.க. உள்பட அனைத்து அரசியல் கட்சி களும் யோசிக்க வேண்டும் என்பது எனது கருத்து. மதச்சார்பின்மை கொள்கை மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள்,ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வகுப்புவா தத்திற்கு எதிரானவர்கள், சர்வாதிகாரத்திற்கு எதிரான வர்கள், பாசிசத்திற்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும் யஷ்வந்த் சின்காவை ஆதரிப்பார்கள். அப்படி ஆதரித்தால் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது, மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா, மாவட்டக்குழு உறுப்பினர் மாதையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கிருஷ்ணகிரியில் கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பிடிபட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கடை கள், வணிக நிறுவனங்களில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதாக நகராட்சி தலைவர் பரிதாநவாப்பிற்கு புகார் சென்றது.

    இதையடுத்து கடை கள் மற்றும் வணிக நிறு வனங்களில ஆய்வு செய்திட அவர் உத்தரவிட்டார்.அதன் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் தலைமையில், ஆய்வா ளர்கள் உதயகுமார், சந்திரகுமார், கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், தின்பண்டங்கள் விற்பனை செய்ய கூடிய கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் சப்ஜெயில் சாலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்ய கூடிய கடைகளில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 கடை களுக்கு, ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மக்காத பிளாஸ்டிக் கவர்களை வணிக நிறுவனங்கள், கடைகளில் விற்பனை செய்ய கூடாது. துணிப்பைகளை பயன்படுத்திட வேண்டும். அவ்வாறு பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வழங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சில நாட்கள் பாறைகளுக்கு வைக்கப்படும் வெடி சத்தத்தால் கிராமங்கள் அதிர்கிறது.
    • வீட்டின் கூரை மீது கல் சிதறி விழுந்து சேதமானது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஒசஅல்லி ஊராட்சி அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் கல் உடைக்கும் குவாரி உள்ளது.

    இந்த குவாரி சுற்றுப்புறத்தில் டேம் எப்பளம், கோயில் எப்பளம், எரி எப்பளம், கெட்டூர், ஒசஅல்லி மற்றும்கிரா மங்கள் உள்ளன. வாரத்தில் சில நாட்கள் பாறைகளுக்கு வைக்கப்படும் வெடி சத்தத்தால் கிரா மங்கள் அதிர்கிறது.

    நேற்று முன்தினம் மாலை வெடி வைத்ததில் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரி எப்பளம் கிராமத்தில் முனியப்பா (60) என்பவருக்கு சொந்தமான வீட்டின் கூரை மீது கல் சிதறி விழுந்து சேதமானது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. 

    • தமிழ்நாட்டில் மாநக ராட்சிகள், நகராட்சிகளில் இந்த கருத்து பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • கைகளால் சுத்தம் செய்வதை தடுக்க மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படுவதை பொது மக்கள், தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி, மாநகர தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான கருத்துப்பட்டறை நடைபெற்றது.

    சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதிலிருந்து பணியாளர்களை காக்கும் வகையிலான கருத்துப்பட்டறை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக தேசிய தூய்மை பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உதவியுடன் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் மாநக ராட்சிகள், நகராட்சிகளில் இந்த கருத்து பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள தனியார் மண்ட பத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மேயர் எஸ்.ஏ.சத்யா, தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், கைகளால் கழிவுகளை அள்ளுவது,சாக்கடைகளை சுத்தம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. பணி யாளர்கள் முறையான உபக ரணங்களை பயன்படுத்தியே இதுபோன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதில், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவன இயக்கு னர் மோகன்ராம் கலந்து கொண்டு, கைகளால் சுத்தம் செய்வதை தடுக்க மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படுவதை பொது மக்கள், தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 500 ஏக்கரில் நிலக்கடலை விதைப்பு.
    • மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா பி,எஸ்,திம்மசந்திரம், காட்டுநாயக்கனதொட்டி, பேரிகை, சின்னாரன் தொட்டி, நெரிகம், ஆலுர் ,கு ம்பளம், மாரண்டப்பள்ளி, செட்டிபள்ளி, காளிங்கா வரம், மருதாண்டப்பள்ளி, மேலுமலை, உத்தனபள்ளி, காமன்தொட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் 10 நாளைக்கு முன்பு தொடர் மழை பெய்தது.

    இதனால்விவசாயிகள் தோட்டங்களை உழுது பண்படுத்தி 500 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் அரசு வேளாண்மை துறையின் மூலமும், தனியார் மூலமும் நிலக்கடலை விதைகள் வாங்கி மிக ஆவலாக விளை நிலங்களில் விதைத்தனர்.

    தொடர் மழை நீடிக்கும் என விவசாயிகள் காத்து இருந்தனர். ஆனால் மழை பெய்யாததால் கவலையில் மூழ்கியுள்ளனர்.

    • பள்ளி மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • ராஜேந்திரனை போக்சோவில் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராஜேந்திரன் (வயது29). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது பற்றி அந்த அந்த மாணவியின் பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நிலத்தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.
    • 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் போலீஸ் சரகம் கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது.

    இதன் எதிரொலியாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. இரண்டு தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் போச்சம்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

    அதன் பேரில் பாரூர் போலீசார் ராமமூர்த்தி, சரசுவதி, விஜயகுமார், இளவரசன், பூபதி, சாலி, அரிகிருஷ்ணன், மஞ்சம்மாள் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விழாவிற்கு பி.எம்.சி டெக் குழுமத்தின் தலைவர் குமார் தலைமை தாங்கினார்.
    • கல்லூரியில் பயின்ற 457 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டங்களை பெறுகின்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் என்ஜினீயர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பி.எம்.சி டெக் குழுமத்தின் தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மலர், கல்லூரியின் அறங்காவலர் சசிரேக்கா மற்றும் முதல்வர் சித்ரா ஆகியோர் இணைந்து பட்டமளிப்பு விழாவினை விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    இவ்விழாவில் பி.எம்.சி. டெக் கல்லூரியின் இயக்குனர் சுதாகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு விருட்சுவா கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் மனிதவள மேலாண்மை இயக்குநர் சந்தர சேகர் சென்னியப்பன் பங்கு பெற்று பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் பி.எம்.சி.டெக் கல்லூரியின் தலைவர் குமார் பேசுகையில் பி.எம்.சி பட்டதாரிகள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். சிறந்த தொழில் முனைவோர்களாகி நமது தேசத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று வாழ்த்தினார்.

    கல்லூரியில் பயின்ற 457 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டங்களை பெறுகின்றனர்.

    9 மாணவர்கள் பல்கலைக்கழகம் அளவில் சாதனைகளை படைத்து ள்ளனர்.

    மேலும் அதிக பட்சமாக 9.5 லட்சம் மற்றும் சராசரியாக 3.6 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு ஊதியம் தரும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி அம்பிகா.
    • கைதான சித்ராவை சேலம் மகளிர் சிறையிலும், இளவரசனை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி அம்பிகா.

    இந்த நிலையில் இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இளவரசன், இவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் வாங்கிய பணத்திற்கு வட்டியும், முதலும் கட்டாமல் அம்பிகா காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா தனது கணவருடன் அம்பிகா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் அடைக்கவில்லை. அதனால் நீங்கள் வாங்கிய 1 லட்சத்து 20 ஆயிரம் பணம் எல்லாம் சேர்த்து 5 லட்சத்து 20 ஆயிரமாக கொடுக்க வேண்டும் என்று கூறினர். அம்பிகாவும், அவரது கணவரும் அவ்வளவு பணம் கொடுக்கமுடியாது என்றனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அம்பிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அம்பிகா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் கந்துவட்டி பணம் கேட்டு மிரட்டியதாக சித்ரா, இளவரசன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர்.

    கைதான சித்ராவை சேலம் மகளிர் சிறையிலும், இளவரசனை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

    • தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரம்பேட்டை போலீஸ் சரகம் நடுப்பட்டியை சேர்ந்தவர் வெங்கம்மாள் (65).

    இவருக்கு தீராத வயிற்று வலி ருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் நேற்று மாலைஅரளி விதையை அரைத்து குடித்துவிட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சிங்காரம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • மர்ம நபர்கள் 2 பேர் கிரேன் சக்கரங்களை திருடி சென்றுவிட்டனர்.
    • 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பொருட்களை மீட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள டி.சூலகுண்டா பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் சூப்பர்வை சராக வேலை பார்த்து வருபவர் காவேரியப்பா (63).

    கடந்த சில தினங்களுக்கும் முன்பு இந்த நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் கிரேன் சக்கரங்களை திருடி சென்றுவிட்டதாக தளி போலீசில் காவேரியப்பா புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள என்.கொத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(27),பிரபாகர்(26) ஆகிய 2 பேர்தான் அந்த கம்பெனியில் திருடியது தெரியவந்தது .

    2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பொருட்களை மீட்டனர்.

    ×