என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் நிறுவனத்தில் திருடிய 2 வாலிபர்கள் கைது
- மர்ம நபர்கள் 2 பேர் கிரேன் சக்கரங்களை திருடி சென்றுவிட்டனர்.
- 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பொருட்களை மீட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள டி.சூலகுண்டா பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் சூப்பர்வை சராக வேலை பார்த்து வருபவர் காவேரியப்பா (63).
கடந்த சில தினங்களுக்கும் முன்பு இந்த நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் கிரேன் சக்கரங்களை திருடி சென்றுவிட்டதாக தளி போலீசில் காவேரியப்பா புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள என்.கொத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(27),பிரபாகர்(26) ஆகிய 2 பேர்தான் அந்த கம்பெனியில் திருடியது தெரியவந்தது .
2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பொருட்களை மீட்டனர்.
Next Story






