என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை மக்கள் நிராகரிப்பார்கள்- ஓசூரில் இரா.முத்தரசன் பேட்டி
- ஓசூரில் கம்யூனிஸ்ட் தலைவர் பேட்டியளித்தார்.
- அடுத்த தேர்தலில் மோடி தோற்பார் என்று கூறினார்.
ஓசூர்,
சி.பி.ஐ. கட்சியின் ஓசூர் நகர 24-வது மாநாடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய பாஜ.க.அரசு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற சர்வாதி காரத்தின் மீது நம்பிக்கை கொண்ட, பாசிசத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசாக இருந்து வருகிறது.
வருகிற 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் மோடி ஆட்சியை நிராகரிப்பார்கள். அதற்குண்டான அனைத்து பணிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செயல்படுத்தும்.
மோடி ஆட்சியில் தளபதிகள் அரசியல் பேசத்தொடங்கியிருப்பது, நாட்டுக்கும், ஜன நாயகத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். அக்னி பத் திட்டத்தால் இளை ஞர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். அவர்களின் எதிர்கால வாழ்வுரிமை பறிக்கப்படும். எனவேதான் இத்திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் போராடி வருகின்றன. இளைஞர்களும் போராடு கின்றனர்.
ஆனால் மத்திய அரசு, முறையாக போராட்டத்தை அமைதிப்படுத்தாமல் போராட்டத்தில் ஈடு படும் இளைஞர்களை கடுமையாக அச்சுறுத்தி ராணுவ தளபதிகள் மூலம் பேட்டியளிக்க வைத்திருப்பது ஏற்புடை யதல்ல. ஜனநாயகத்திற்கும் இது நல்லதல்ல.
குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் பாதுகாவலர். அவ்வாறு பாதுகாப்பதில் திரவுபதி முர்மு பொருத்தமானவரா அல்லது யஷ்வந்த் சின்கா பொருத்தமானவரா என்பதை, பா.ஜ.க. உள்பட அனைத்து அரசியல் கட்சி களும் யோசிக்க வேண்டும் என்பது எனது கருத்து. மதச்சார்பின்மை கொள்கை மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள்,ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வகுப்புவா தத்திற்கு எதிரானவர்கள், சர்வாதிகாரத்திற்கு எதிரான வர்கள், பாசிசத்திற்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும் யஷ்வந்த் சின்காவை ஆதரிப்பார்கள். அப்படி ஆதரித்தால் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது, மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா, மாவட்டக்குழு உறுப்பினர் மாதையன் ஆகியோர் உடன் இருந்தனர்.






