என் மலர்
நீங்கள் தேடியது "வெடி வைப்பதால் அதிரும் கிராமங்கள்"
- சில நாட்கள் பாறைகளுக்கு வைக்கப்படும் வெடி சத்தத்தால் கிராமங்கள் அதிர்கிறது.
- வீட்டின் கூரை மீது கல் சிதறி விழுந்து சேதமானது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஒசஅல்லி ஊராட்சி அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் கல் உடைக்கும் குவாரி உள்ளது.
இந்த குவாரி சுற்றுப்புறத்தில் டேம் எப்பளம், கோயில் எப்பளம், எரி எப்பளம், கெட்டூர், ஒசஅல்லி மற்றும்கிரா மங்கள் உள்ளன. வாரத்தில் சில நாட்கள் பாறைகளுக்கு வைக்கப்படும் வெடி சத்தத்தால் கிரா மங்கள் அதிர்கிறது.
நேற்று முன்தினம் மாலை வெடி வைத்ததில் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரி எப்பளம் கிராமத்தில் முனியப்பா (60) என்பவருக்கு சொந்தமான வீட்டின் கூரை மீது கல் சிதறி விழுந்து சேதமானது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.






