என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டம்: எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக ஏற்க வேண்டும்
- கடந்த 4 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றிய எடப்பாடி கே.பழனிச்சாமி.
- ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை தேவை என்ற கருத்தை வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றிய எடப்பாடி கே.பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களின் அனை வரின் ஒத்துழைப்போடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ ரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கட்டப்பன், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன்,சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன்,பையூர் ரவி, ராமமூர்த்தி, வேங்கன், வேடி, சக்ரவர்த்தி, தேவராசன், முருகன், வெங்கடாசலம், நகர செயலாளர் கேசவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தங்கமுத்து,முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு ,பேரூர் கழக செயலாளர்கள் விமல், சிக்னல் ஆறுமுகம்,மாவட்ட துணை செயலாளர் ஷாகுல் அமீது, மாவட்ட நிர்வாகிகள்,மற்றும் அனைத்து சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






