என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரிகளை மூட வலியுறுத்தி  தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    கல்குவாரிகளை மூட வலியுறுத்தி தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

    • 7 கல்குவாரிகளில் பாறைகளை வெடிவைத்து வெடிப்பதால் அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிச்சல் ஏற்படுகிறது.
    • பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு புழுதி படிவதால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள முறையற்ற கல் குவாரிகளை நிரந்தரமாக மூடக்கோரி பா.ஜ.க. சார்பில் தேன்கனி கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளி ஒன்றிய தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். அமைப்பு சாரா மாநில துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட துனைதலைவர் சீனிவாச ரெட்டி, பொதுச் செயலாளர்கள் மனோகரன், அன்பரசன், விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவி மஞ்சுளா, மாவட்ட மகளிர் செயலாளர் வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இவை அனைத்தும் சட்ட விரோதமாக அதிக அளவில் கிரானைட் கற்கள் மற்றும் ஜல்லிகற்களை அதிக அளவில் வெட்டி எடுத்து சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்ட கிரி கிராமத்தை சுற்றி லும் இயங்கிவரும் 7 கல்குவாரிகளில் பாறை களை வெடிவைத்து வெடிப்பதால் அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிச்சல் ஏற்படுகிறது.

    பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு புழுதி படிவதால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிறந்தரமாக முட வேண்டும் இல்லையென்றால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களை திரட்டி நெடுஞ்சாலையில் மறியல் நடைபெறும் என கூறினர்.

    Next Story
    ×