என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நாளை வெள்ளிக்கிழமை (8-ந் தேதி) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (8-ந் தேதி) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இம்மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையான நாளை (8-ந் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனி யார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும்.

    இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • முறைபடி பத்திர பதிவு செய்து, 35 வருடங்களாக அனுபவித்து வருகிறோம்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றோம் என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக மூன்றாவது மாடியில் அமைச்சர்கள் காந்தி, மூர்த்தி, தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு தனதுகுடும்பத்தினருடன் வந்த காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடி கிராமத்தை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி(வயது 36), தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனதுகுடும்பத்தினர் மீதும், தன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, விசாரணை செய்தனர்.

    விவசாரணையில் தட்சி ணாமூர்த்தி கூறியதாவது:-

    எங்கள் ஊரான கருக்கன்சாவடியில், என் தந்தை பொன்னுசாமி(74), தன் குடும்ப சொத்தில், அவரது பாகத்துடன், பெரியப்பாவின் பாகத்திற்கான பணத்தையும் கொடுத்து, அவர்கள் நிலங்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டார். அதை முறைபடி பத்திர பதிவு செய்து, 35 வருடங்களாக அனுபவித்து வருகிறோம்.

    இந்நிலையில் எனது பெரியப்பா மகன்களான கோவிந்தராஜ் மற்றும் 5 பேர், அவர்களை ஏமாற்றி நிலத்தை வாங்கியதாக கூறி, நிலத்தை திரும்பி கேட்டு தகராறு செய்கின்றனர்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி புகார் அளித்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை.

    எனவே கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றோம் என்றார்.

    இதையடுத்து தீக்குளிக்க முயற்சி செய்த தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி பானுப்பிரியா(33), அவர்களின் இரு குழந்தைகள், தந்தை பொன்னுசாமி, தாய் பச்சையம்மாள்(62), தங்கை பிரேமாவதி(33), உறவினர் 17 வயது சிறுவன் என 8 பேரையும், காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • நிலைதடுமாறி சாலையில் எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் தவறி விழுந்தார்.
    • இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே பர்கூர் அடுத்துள்ள மஜித் கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45).

    இவர் கடந்த 4-ந்தேதி அன்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சின்னமுட்டுலு என்ற இடத்தில் வந்த போது நிலைதடுமாறி சாலையில் எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ. 22,000- மதிக்கதக்க உணவு பொருட்களை வழங்கி உதவினர்.
    • 7 டாக்டர்களுக்கு நினைவு பரிசு கொடுத்து கவுரவித்தனர்.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஒசூர் ரோட்டரி கிளப்-ஆப் ஏஞ்செல்ஸ் குழுவின் சார்பாக, எச்.ஐ.வி. பாதித்த குடும்பத்தினருக்கு சூளகிரி ரோடு தன்னார்வரால் குழு மூலமாக சகுந்தலா மற்றும் சூளகிரி வட்டார மருத்துவர்வெண்ணிலா முன்னிலையில் ரூ22,000- மதிக்கதக்க உணவு பொருட்களை வழங்கி உதவினர்.

    இந்த நிகழ்ச்சியில் தலைவர் ஆலிவ் சாந்தி, செயலாளர் சங்கீதா ரவி, மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து விழாவை சிறப்பித்தனர். இதில் 7 டாக்டர்களுக்கு நினைவு பரிசு கொடுத்து கவுரவித்தனர்.

    இதில் அச்சங்கத்தின் சங்க ஆலோசகர் ரஞ்சனா படேல், தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆடிட்டர்பேட ராய சாமியை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசளித்து அலுவ லர்களுக்கு இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்க ஆலோசகர், தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • போலியான நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்வதை தடுத்திடவும் பல்வேறு தொடர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
    • பதிவுத்துறை மூலம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் ஈட்டப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக, அமைச்சர்கள் மூர்த்தி, காந்தி ஆகியோர் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக சேலம் வணிகவரி கோட்டம் மற்றும் சேலம் பதிவுத்துறை மண்டல அளவிலான அலுவலர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சீராய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், முதன்மை செயலரும், வணிக வரி ஆணையருமான தீரஜ்குமார், அரசு செயலர் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை) ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, டாக்டர்.செல்லக்குமார் எம்.பி.,

    எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பென்னாகரம் ஜி.கே.மணி, மேட்டூர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பதிவுத்துறை தலைவர் சிவனருள் வரவேற்புரையாற்றினார்.

    இதில், அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    க தமிழக முதல்வர், வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து, பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டவும், வரி செலுத்தாதவர்களை கண்டறிந்து வரி வசூல் செய்யவும், போலியான நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்வதை தடுத்திடவும் பல்வேறு தொடர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    அதன் அடிப்படையில், இன்று சேலம் கோட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வணிகவரித்துறை, பதி வுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    தமிழக முதல்அ-மைச்ச ரின் வழிகாட்டுதலின்படி, அனைத்து அலுவலர்களும் நல்ல முறையில் பணியாற்று வதன் விளைவாக வணிகவரித்துறை சார்பாக கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960 கோடி என்ற இருந்த வருவாய் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பதிவுத்துறை சார்பாக ரூ.13 ஆயிரம் கோடி வருவாய் இருந்ததை ரூ.20 ஆயிரம் கோடி இலக்கு எய்தப்பட்டது. அதன்படி, வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை மூலம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் ஈட்டப்படும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    முன்னதாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பயன்படுத்தப்பட்ட தொன்மை வாய்ந்த அலுவலக பதிவேடு மற்றும் முத்திரைகள், அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்த கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்ததை அமைச்சர்கள் பார்வை யிட்டனர்.

    தொடர்ந்து சேலம் மண்டல வணிகவரி துறை, கூடுதல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் துறை அலுவலர்களுக்கான சீராய்வுக் கூட்டம் மற்றும் சேலம் பதிவு மண்டல அளவிலான துணைப் பதிவாளர்கள், சார் பதிவார்க ளுக்கான சீராய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் பரமேஸ்வரன், இணை ஆணையர் ஜெயராமன், துணை ஆணையர் ஹேமா, கூடுதல் பதிவுத்துறை தலைலர்கள் சீனிவாசன், முகமதுஜபார் சாதிக், அங்கயற்கண்ணி, சேலம் மண்டல பதிவுத்துறை துணை தலைவர் பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் கவிதா மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்ட துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், துணை பதிவாளர்கள், சார் பதிவாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், தடங்கம் சுப்பிரமணி, முருகன், பி.டி.ஏ தலைவர்கள் நவாப், பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீ மகாமாரியம்மன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா விற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி டேம் அருகில் உள்ள பச்சிகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பழையபேயனப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா நடந்தது.

    கடந்த 5-ந் தேதி கங்க பூஜை, கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல், சத்துர் துவார பூஜை, பரிஹ தேவதை கலச பிரதிஷ்டையக்னேஸ்வர பிரதிஸ்டை, பூர்ண கும்பம் பிரதிஸ்டை, மகா காயத்திரி ஹோமம், ருத்திர ஹோமம், பூர்ணாஹி தீபாராதனை, தீர்த்த பிரசாதம் விநியோகத்தில் ஆகிய நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அன்று இரவு சுவாமி பிரதிஸ்டை நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சண்டி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.

    பின்னர் பூரண கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, ஸ்ரீ மகாமாரியம்மன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பழையபேய னப்பள்ளி கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற வர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா விற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • 3 மணி நேரத்தில் கூட்டாளிகளுடன் போலீசார் மடக்கினர்.
    • இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து அமீர் அவரது நண்பர்கள் என 4 பேரை போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர் (வயது19). இவரது தங்கையும், தருமபுரி பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பரும், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்த விஷயம் அமீருக்கு தெரியவந்தது. இதனால் தனது தங்கையை பலமுறை கண்டித்துள்ளார்.

    ஆனால் அவர் காதலன் மாதேஸ்சிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமீர், மாதேசை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் காதலை கைவிடுவதாக தெரியவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்து மாதேசை கொலை செய்ய அமீர் தனது நண்பர்கள் மூலம் திட்டம் தீட்டினார். இதனால்அமீர், தனது நண்பர்களுடன் நேற்று மாலை ஒரு கார், ஒரு ேமாட்டார் சைக்கிளில் பாலக்கோடு கல்லூரிக்கு வந்தார்.

    அப்போது கல்லூரி முடிந்து வெளியே நின்று கொண்டிருந்த மாேதசை, அமீர் கும்பல் காரில் தூக்கி சென்றனர். இதனால் அவர் அலறினார். அந்த அலறல் சத்தம் கேட்டு சக மாணவர்கள் ஓடி வந்தனர்.

    பைக்கில் வந்த அமீரின் நண்பர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இது தொடர்பாக சிக்கிய அமீர் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் காதல் விவகாரத்தில் மாதேசை கடத்தி கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்தது.

    உடனே போலீசார் சூளகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர்.

    அப்போது மாதேசை கடத்தி வந்த வாகனத்தை மறித்தனர். ஆனால் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர்.

    உடனே போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த அமீர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மாதேசை மீட்டனர்.

    இது பற்றி பாலக்கோடு போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாலக்கோடு போலீசார் சூளகிரிக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு போலீசார் தாங்கள் பிடித்து வைத்திருந்த அமீர் மற்றும் கூட்டாளிகளை பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாதேசையும் போலீசார் மீட்டு வந்தனர்.

    இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து அமீர் அவரது நண்பர்கள் என 4 பேரை போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவரை கடத்திய 3 மணி நேரத்தில் போலீசார் விரைந்து சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்கள் இடையே சண்டைப்படம் பார்த்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில், கைத்தறி மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
    • நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக, விவசாய நீர் பாசனத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன், தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, நகர செயலாளர் நவாப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன், செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையத் ஜஹிருத்தீன், உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உண்ணாவிரத போராட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
    • ஊழல்வாதத்தை தி.மு.க. அரசு, மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும்.

    ஓசூர்,

    பா.ஜ.க. சார்பில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி சார்பில், ஓசூர் ராம்நகரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச்செயலாளர்கள் மனோகர், அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    மேலும் இதில் மாநில, மாவட்ட, மண்டல, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    உண்ணாவிரத மேடையில், நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி இந்த இரண்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் ஆட்சி புரியவேண்டும் என்பது பா.ஜ.க.வின் நோக்கம். ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு இந்த இரண்டையும் கொண்டுள்ளது. குடும்ப ஆட்சி,ஊழல் ஆட்சியை எதிர்ப்பது மட்டுமின்றி, அவர்கள் கொடுத்துள்ள பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எச்சரிக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் பா.ஜ.க. இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, நேற்று முன்தினம்தமிழகம் அடங்காது, நாங்கள் பெரியார் பாதையில் செல்வோம், தனித்தமிழ்நாடு அடைந்தே தீருவோம் என்றெல்லாம் பேசியுள்ளார். அவர்கள் கருணாநிதி பாதை, அண்ணா பாதை, பெரியார் பாதை என எந்த பாதை எடுத்து வந்தாலும் சரி, இந்தியா முழுவதும் இருக்கிற, இருக்கப்போகிற பாதை, மோடி பாதை மட்டும்தான். மற்ற பாதைகளெல்லாம் மூடப்போகிறது. இந்த தீவிரவாதத்தை பிரிவினைவாதத்தை, ஊழல்வாதத்தை தி.மு.க. அரசு, மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேட்டியின்போது கூறினார்.

    • விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தில் இருந்தும் விடுதலைப் பெற வேண்டும்.
    • 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், உழவர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்குள், ஒரு லட்சம் விவசாய பம்பு செட்டுக்கு மேல் இலவச மின்இணைப்பு வழங்கிய தமிழக அரசை பாராட்டியும், தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தில் இருந்தும் விடுதலைப் பெறவும், பால், கரும்பு, மா, தென்னை, நெல், காய்கறி ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்கவும், இலவச மின்சாரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் அஞ்சலி நினைவாக, நேற்று மாலை கிருஷ்ணகிரி எல்.ஐ.சி., அலுவலகத்திலிருந்து ரவுண்டானா வரை விவசாயிகளின் பேரணி நடந்து.

    அதை தொடர்ந்து ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அனுமந்தராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணிரெட்டி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேற்கு மாவட்டத் தலைவர் வண்ணப்பா, மாவட்ட துணைத் தலைவர் தோப்பைய கவுண்டர், மாவட்ட ஆலோசகர் நசீர்அமகத், மாவட்ட மகளிர் அணி தலைவி பெருமா, மாவட்ட துணைத் தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க பொதுச் செயலாளர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வ சிகாமணி, தென்னிந் திய விவசாயிகள் சங்கத் தலைவர் நரசிம்மம் நாயுடு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

    • 11 காட்டு யானைகளை விரட்ட தமிழக வனத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
    • வனப்பகுதியில் இருந்து போடூர் பள்ளம் வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டி உள்ளனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி, சிகரளப்பள்ளி, மகாராஜகடை வனபகுதிகளில் 11 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும், பயிர்களையும் நாசம் செய்து வந்தது.

    இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்து வந்தனர். மேலும் யானைகள் உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இந்த காட்டு யானைகளை வனபகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் வனத்துறையினரை வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் 11 காட்டு யானைகளை விரட்ட தமிழக வனத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து போடூர் பள்ளம் வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டி உள்ளனர்.

    அதனால் இப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் மீண்டும் வராதவாறு வனத்துறையினர் மீண்டும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நாளை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.
    • ஓசூர் கோட்டத்தை சேர்ந்த டைட்டான் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    ஓசூர்,

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த டைட்டான் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    எனவே, நாளை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், அரசனட்டி, பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சூர்யா நகர், சாந்தபுரம்,பிருந்தாவன் நகர், கிருஷ்ணா நகர் அண்ணாமலைநகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×