search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழையபேயனப்பள்ளி கிராமத்தில்  ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    பழையபேயனப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • ஸ்ரீ மகாமாரியம்மன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா விற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி டேம் அருகில் உள்ள பச்சிகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பழையபேயனப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா நடந்தது.

    கடந்த 5-ந் தேதி கங்க பூஜை, கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல், சத்துர் துவார பூஜை, பரிஹ தேவதை கலச பிரதிஷ்டையக்னேஸ்வர பிரதிஸ்டை, பூர்ண கும்பம் பிரதிஸ்டை, மகா காயத்திரி ஹோமம், ருத்திர ஹோமம், பூர்ணாஹி தீபாராதனை, தீர்த்த பிரசாதம் விநியோகத்தில் ஆகிய நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அன்று இரவு சுவாமி பிரதிஸ்டை நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சண்டி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.

    பின்னர் பூரண கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, ஸ்ரீ மகாமாரியம்மன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பழையபேய னப்பள்ளி கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற வர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா விற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×