என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர்."
- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில், கைத்தறி மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
- நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக, விவசாய நீர் பாசனத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன், தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, நகர செயலாளர் நவாப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன், செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையத் ஜஹிருத்தீன், உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






