என் மலர்
நீங்கள் தேடியது "தீக்குளிக்க முயன்ற விவசாயி"
- பொது வழிப்பாதையை ஒதுக்கித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.
- அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கந்தசாமி தீக்குளிக்க முயன்றார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி.இவருக்கு கிருஷ்ணகவுண்டனூர் கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது.இவரது நிலத்திற்கு அருகே பொது வழி பாதை இருந்துள்ளது.
அந்த பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கந்தசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
ஆனாலும் அவருக்குரிய வழிப்பாதையை ஒதுக்கிவிடாமலும், இதுகுறித்து நியாயம் கேட்க சென்றால் கந்தசாமியை தாக்க வருவதாகவும்,எனவே உரிய நடவடிக்கை எடுத்து தனக்குரிய பொது வழிப்பாதையை ஒதுக்கித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கந்தசாமி தீக்குளிக்க முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து கைப்பற்றினர்.பின்னர் அவரை எச்சரித்து கலெக்டர் அலுவலகத்தில் அவரது கோரிக்கை மனுவை கொடுத்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடக்கும் நாட்களில் இதேபோல தீக்குளிப்பு முயற்சிகள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முறைபடி பத்திர பதிவு செய்து, 35 வருடங்களாக அனுபவித்து வருகிறோம்.
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றோம் என்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக மூன்றாவது மாடியில் அமைச்சர்கள் காந்தி, மூர்த்தி, தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு தனதுகுடும்பத்தினருடன் வந்த காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடி கிராமத்தை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி(வயது 36), தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனதுகுடும்பத்தினர் மீதும், தன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, விசாரணை செய்தனர்.
விவசாரணையில் தட்சி ணாமூர்த்தி கூறியதாவது:-
எங்கள் ஊரான கருக்கன்சாவடியில், என் தந்தை பொன்னுசாமி(74), தன் குடும்ப சொத்தில், அவரது பாகத்துடன், பெரியப்பாவின் பாகத்திற்கான பணத்தையும் கொடுத்து, அவர்கள் நிலங்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டார். அதை முறைபடி பத்திர பதிவு செய்து, 35 வருடங்களாக அனுபவித்து வருகிறோம்.
இந்நிலையில் எனது பெரியப்பா மகன்களான கோவிந்தராஜ் மற்றும் 5 பேர், அவர்களை ஏமாற்றி நிலத்தை வாங்கியதாக கூறி, நிலத்தை திரும்பி கேட்டு தகராறு செய்கின்றனர்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி புகார் அளித்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை.
எனவே கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றோம் என்றார்.
இதையடுத்து தீக்குளிக்க முயற்சி செய்த தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி பானுப்பிரியா(33), அவர்களின் இரு குழந்தைகள், தந்தை பொன்னுசாமி, தாய் பச்சையம்மாள்(62), தங்கை பிரேமாவதி(33), உறவினர் 17 வயது சிறுவன் என 8 பேரையும், காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






