என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அந்த நபர்கள் மரம் வெட்டுவதற்கான எந்த ஒரு அதிகாரியிடமும் அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.
    • அனுமதி பெறாமல் சாலை ஓரத்தில் இருந்த மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேரூராட்சி அலுவலக சாலையில் பல ஆண்டுகளாக வளர்ந்த பெரிய புளிய மரம் இருந்தது.

    இந்த பழமையான மரத்தை அப்பகுதியில் உள்ள சிலர் பட்டப் பகலில் கிரேன் எந்திரத்துடன் வந்து மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து மரத்தை முழுவதும் எடுத்துச் சென்று விட்டனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த பொது மக்களும் இயற்கை ஆர்வலர்களும் பேருராட்சி நிர்வாகத்திலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். சாலையோர மரத்தை வெட்டுவதற்கு யாருக்கும் அனுமதிவழங்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபர்கள் மரம் வெட்டுவதற்கான எந்த ஒரு அதிகாரியிடமும் அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.

    இதனால் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அனுமதி பெறாமல் சாலை ஓரத்தில் இருந்த மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கெலமங்கலம் பேருராட்சி அலுவலகம் அருகில் உள்ள புளியமரத்தை எந்த அனுமதியும் பெறாமல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார்.
    • மாவட்ட கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிக்கு இறுதி பட்டியல் வழங்கமைக்கு மன்ற அங்கீகாரம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நகராட்சி தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மாநில நிதி குழு மாநில திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் முடிவுற்று முடிவு பட்டியல் வர பெற்றமைக்கு நிதி விடுவிக்கப்பட்டமைக்கு மன்றத்தின் அங்கீகாரம் கோருதல், மாநில நிதி குழு மானியம் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி 2019-2020 ஆண்டுக்கான சிறு பாசன ஏரிகள் குளங்கள், ஊரணிகள் ஆகியவைகளை புனரமைக்கும் சிறப்பு திட்டம் மாவட்ட கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிக்கு இறுதி பட்டியல் வழங்கமைக்கு மன்ற அங்கீகாரம்.

    மேலும் கழிவுநீர் கால்வாய் அமைத்தால், ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு மன்றத்தின் அங்கீகாரம் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.23 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • ஒன்றிய குழு தலைவர் டி.கேசவமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ஊடேதுர்கம் ஊராட்சியில் 14-வது நிதி குழு மாண்யத்திட்டத்தில் வெள்ளி சந்தை கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், கொம்பேபள்ளி கிராமத்தில் ரூ 2. லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

     யூகொத்தப்பள்ளி கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பேவர்பிளாக் அமைத்தல், வன்னியப்புர கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுதலைவர் டி.கேசவமூர்த்தி பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் அசோ கன், ஊராட்சி செயலாளர் முனிராஜ், முன்னால் வார்டு உறுப்பினர் நாராயணசாமி, ஊர் முக்கியஸ்தார்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • சீட்டு விளையாடும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
    • ரஞ்சித்குமார் வீட்டில் யாரும் இல்லாததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி.  விவசாயி. இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது24). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அவரது தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் சீட்டு விளையாடும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

    நேற்று மீண்டும் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறிவிட்டு ராயக்கோட்டைக்கு சென்றுவிட்டார்.

    இதில் மனமுடைந்த ரஞ்சித்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில்  போலீசார் விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக கிடந்த ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 779 பணத்தை செலுத்தினார்.
    • கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஹேமபிரியா (வயது28).

    இந்த நிலையில் இவரது செல்போன் வாட்ஸ்அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார்.

    அப்போது நீங்கள் குறைந்த பணம் செலுத்தினால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டது.

    உடனே அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 779 பணத்தை செலுத்தினார்.

    பின்னர் ஏமாற்றம் அடைந்தது தெரியவரவே கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் மாதையனை தாக்கியும், பெட்டிகடையும் அடித்து நொறுக்கினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வெங்கடாசலம், வைத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ராசுவீதி பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது34). இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (23), வைத்தீஸ்வரன் ஆகியோர் கூல்ரிங்ஸ் குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேர் மாதையனை தாக்கியும், பெட்டிகடையும் அடித்து நொறுக்கினர்.

    இது குறித்து மாதையன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடாசலம், வைத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நீலா சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் நீலா தற்கொலை செய்ததால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கோலனூர் அடுத்துள்ள சோலான் குட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.

    இவர் சென்னை பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நீலா (வயது22). இவர்களுக்கு வர்ஷினி (3), மோனிக் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நீலா சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த நீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் நீலா தற்கொலை செய்ததால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் 3 குழுக்களாக சோதனை நடத்தினர்.
    • 3 தொழிற்சாலைகளிலும், இரவு 10.30 மணி வரை நடந்த இச் சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

    ஓசூர்,

    ஓசூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான 3 பிரபல மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

    காய்ச்சலுக்கு நிவாரணியாக பயன்படுத்தப்படும் டோலோ 650 என்ற மாத்திரை மற்றும் ஏராளமான மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு ஓசூரில் இயங்கி வருகிறது.

    வருமானவரித்துறை ஏய்ப்பு முறைகேட்டில் எழுந்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் திலீப் சுரானா மற்றும் இயக்குனர் ஆனந்த் சுரானா ஆகியோரது வீடுகளில் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் இவர்கள், தமிழ்நாடு, மும்பை, டெல்லி, சிக்கிம் ,கோவா உள்பட நாடு முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 3 தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் 3 குழுக்களாக சோதனை நடத்தினர்.

    இந்த அதிகாரிகள் பெங்களூரிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. 3 தொழிற்சாலைகளிலும், இரவு 10.30 மணி வரை நடந்த இச் சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

    • மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தயார் செய்து கொண்டிருந்தார்.
    • நீட் தேர்வுக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஓசூர்,

    ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கோபி, இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி.

    இவர்களது மகன்கள் முரளி கிருஷ்ணா மற்றும் கீர்த்தி வாசன். முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தயார் செய்து கொண்டிருந்தார்.

    இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வந்தது.

    இதனைப் பார்த்து முரளி கிருஷ்ணா மன அழுத்தத்தில் தன்னால் மீண்டும் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பொழுது நீட் தேர்வுக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் உயிரிழந்த மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், உண்மையிலேயே நீட் தேர்வு அச்சத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் உள்ள கையெழுத்து மாணவருடையதுதானா? என கடிதத்தின் உண்மை தன்மையை அறியும் விதமாக தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
    • இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் சென்னை-திருவண்ணாமலை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பர்கூர் ஜங்சன் பிரிவு திரும்பும் போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது ேமாதியது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பிச்சாண்டி உயிரிழந்தார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணியினை தேர்வு செய்யும் முகாம் மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.
    • பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்த மாவட்ட கிரிக்கெட் தேர்வு முகாமில் கலந்துகொள்ள இயலும்.

    கிருஷ்ணகிரி, 

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.

    இதில் கலந்துகொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட 14 வயது, 16 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட அணிகளை தேர்வு செய்யும் தேர்வு முகாம் வருகிற 10ம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்த முகாமானது மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். அதன்படி, 14 வயதுக்குட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாம் 19ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 1.9.2008 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.

    16 வயதுக்குட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாம், காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 1.9.2006 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்கள் பங்கேற்கலாம். 19 வயதுக்கு உட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாம் மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில் 1.9.2003 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதில் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்த மாவட்ட கிரிக்கெட் தேர்வு முகாமில் கலந்துகொள்ள இயலும்.

    தேர்வு செய்யும் அணி வீரர்களுக்கு பயிற்சிகள் சிறப்பு முகாமில் அளிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான 14, 16 மற்றும் 19 வயது பிரிவு போட்டிகளில் விளையாடிட அழைத்து செல்லப்படுவார்கள்.

    மேலும் விவரம் அறிய விரும்புவோர், இணை செயலாளர் சிவசங்கர்- 96770 00063, இணைச் செயலாளர் ராஜப்பா-99648 69001 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது அறிக்கையில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

    • ஜூலை 11-ந் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு தடையில்லை என அதிரடியாக தீர்ப்பை வழங்கியது.
    • இந்த தீர்ப்பு அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி.

    கிருஷ்ணகிரி,

    அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    ஜூன் 23-ந் தேதி நடந்த பொதுக்குழுவில், தமிழ்மகன் உசேனை பேரவை தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று (ஜூலை 7-ந் தேதி) விசாரணைக்கு வர இருந்த நிலையில்,

    இதை எதிர்த்து பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஜூலை 11-ந் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு தடையில்லை என அதிரடியாக தீர்ப்பை வழங்கியது.

    மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த அ.தி.மு.க.,வினர் நேற்று மதியம் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

    இது குறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ., இந்த தீர்ப்பு அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடிராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, தாபா வெங்கட்ராமன், கிளை செயலாளர் சின்னராஜ், இளைஞர் அணி நகர செயலளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×