என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் தூக்கிட்டு தற்கொலையா?"

    • மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தயார் செய்து கொண்டிருந்தார்.
    • நீட் தேர்வுக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஓசூர்,

    ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கோபி, இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி.

    இவர்களது மகன்கள் முரளி கிருஷ்ணா மற்றும் கீர்த்தி வாசன். முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தயார் செய்து கொண்டிருந்தார்.

    இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வந்தது.

    இதனைப் பார்த்து முரளி கிருஷ்ணா மன அழுத்தத்தில் தன்னால் மீண்டும் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பொழுது நீட் தேர்வுக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் உயிரிழந்த மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், உண்மையிலேயே நீட் தேர்வு அச்சத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் உள்ள கையெழுத்து மாணவருடையதுதானா? என கடிதத்தின் உண்மை தன்மையை அறியும் விதமாக தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×