என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அணி தேர்வு செய்யும் முகாம்- 10-ந் தேதி நடக்கிறது
- அணியினை தேர்வு செய்யும் முகாம் மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.
- பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்த மாவட்ட கிரிக்கெட் தேர்வு முகாமில் கலந்துகொள்ள இயலும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.
இதில் கலந்துகொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட 14 வயது, 16 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட அணிகளை தேர்வு செய்யும் தேர்வு முகாம் வருகிற 10ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த முகாமானது மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். அதன்படி, 14 வயதுக்குட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாம் 19ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 1.9.2008 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.
16 வயதுக்குட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாம், காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 1.9.2006 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்கள் பங்கேற்கலாம். 19 வயதுக்கு உட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாம் மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் 1.9.2003 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதில் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்த மாவட்ட கிரிக்கெட் தேர்வு முகாமில் கலந்துகொள்ள இயலும்.
தேர்வு செய்யும் அணி வீரர்களுக்கு பயிற்சிகள் சிறப்பு முகாமில் அளிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான 14, 16 மற்றும் 19 வயது பிரிவு போட்டிகளில் விளையாடிட அழைத்து செல்லப்படுவார்கள்.
மேலும் விவரம் அறிய விரும்புவோர், இணை செயலாளர் சிவசங்கர்- 96770 00063, இணைச் செயலாளர் ராஜப்பா-99648 69001 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது அறிக்கையில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.






