என் மலர்
கிருஷ்ணகிரி
- 16-ந்தேதி அன்று மாணவி வீட்டை விட்டு வெளியேறி அபினேசுடன் சென்றதாக கூறப்படுகிறது.
- அபினேஷ், மாணவி ஆகியோர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள பேருஅள்ளி பகுதியை சேர்ந்தவர் 17 வயது பிளஸ்-2 மாணவி. இவருக்கும், தஞ்சை மாவட்டம், பாபநாசம் நடுத்தெரு ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போன் மூலம் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி அன்று மாணவி வீட்டை விட்டு வெளியேறி அபினேசுடன் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் எனது மகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அபினேஷ் என்பவர் கடத்தி சென்றுள்ளதாக நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அபினேஷ், மாணவி ஆகியோர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்து வந்தனர். மாணவிக்கு அறிவுரை வழங்கி போலீசார் அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அபினேஷை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- ஓசூர் ெரயில் நிலையம் அருகில் உள்ள கீழ்மை பாலத்தில் மழைக்காலங்களில் அரை மணி நேரம் மழைக்கு தண்ணீர் நிரம்பி பாதை துண்டிக்கப்பட்டு விடுகிறது.
- செயல்பாட்டில் இருந்த கேட் எண்கள் 102 மற்றும் 103 மூடப்பட்டது
ஓசூர்,
ஓசூரில், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக, கிருஷ்ணகிரி எம்.பி டாக்டர் செல்லகுமார் மற்றும் பெங்களூர் கோட்ட மேலாளர் ஷியாம் சிங் ஆகியோர், ரயில்வே நிலையம் அருகே உள்ள பகுதிகளில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.பி செல்லகுமார் கூறியதாவது:-
ரயில்வே துறையில் மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜாக மாற்றப்பட்டதிலிருந்து ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த கேட் எண்கள் 102 மற்றும் 103 மூடப்பட்டது.
இதனால் , ஓசூர் கோகுல் நகர் பசுமைத்தாயகம் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் ஜனகபுரி லே-அவுட் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் சென்று வரவும்,
மருத்துவமனைகளுக்கு செல்லவும் ரயில் பாதையை ஆபத்தான வகையில் கடந்து செல்லும் நிலையில் இருப்பதால் நீண்ட நாட்களாக ரயில்வே துறையிடம் முறையிட்டு வந்தனர்.
எனவே அந்தப் பகுதியில் கீழ்மை பாலம் அல்லது மேம்பாலம் கட்டுவதற்கு மாநில அரசு திட்ட வடிவு அனுப்பினால், ஒரு வாரத்திற்குள் அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அதேபோல ஓசூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கீழ்மை பாலத்தில் மழைக்காலங்களில் அரை மணி நேரம் மழைக்கு தண்ணீர் நிரம்பி பாதை துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதனை , விரிவு படுத்துவதற்கான அனுமதியை நெடுஞ்சாலைத்துறை எங்களிடம் கேட்டால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என ரயில்வே அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளனர். அதேபோல அன்னை நகர் பகுதியில் கீழ்மை பாலத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்டால் வழங்கப்படும் எனவும் கோட்ட மேலாளர் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ஓசூர் -பெங்களூர்- எஸ்வந்த்பூர் மற்றும் ஓசூர் வழியாக செல்லும் பெங்களூர்- காரைக்கால் ஆகிய இரண்டு ரயில்களையும் மீண்டும் இயக்க, ரயில்வே துறையில் சார்பில் முழுமையாக ஆய்வு செய்து மீண்டும் இயக்குவதற்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அதிகாரி உறுதி அளித்துள்ளார்". இவ்வாறு செல்ல குமார் எம்.பி.நிருபர்களிடம் கூறினார். அப்போது, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், மாதேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்குமாறு அறிவுறித்தினார்.
- திட்டப்பணிகளை சேலம் நெடுஞ்சாலைதுறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகளை சேலம் நெடுஞ்சாலைதுறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.
இதில் முக்காசி-பாரந்தூர்-கெலமங்கலம் சாலையில் நடைப்பெற்று வரும் பணிகளின் தரம், அளவு, மற்றும் இதர தரக்கட்டுபாடு அளவுகளை ஆய்வு செய்தார்.
மேலும் சாலை விரிவாக்கம் நடைப்பெறும் இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்குமாறு அறிவுறித்தினார். இந்த ஆய்வின்போது தேன்கனிக்கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் திருமால்செல்வன், கிருஷ்ணகிரி தரக்கட்டுபாடு உதவி பொறியாளர் ரேணுகாதேவி, மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
- கபடி போட்டியை பர்கூர் எம், எல், எ, மதியழகன் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டு துவக்கி வைத்தார்.
- ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சூரியா கபடி குழு மற்றும் பொதுமக்கள் நடத்தும் அகில இந்திய (எ) கிரேடு கபாடி போட்டியை பர்கூர் எம், எல், எ, மதியழகன் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டு துவக்கி வைத்தார்.
உடன் திமுக மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன், ஷேக் ரஷீத்,, ஒசூர் துணை சேர்மன் ஆன்ந்தையா, மாநில விவசாய அணி வெங்கடேஷ், பி, டி, ஒ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், சூரியாகபடிக்குழு நிர்வாகிகள் ஜுயாஉல்லா, சுரேஷ், குமார், மற்றும் குழுவினர், கண் வினர் கோபால், மற்றும் அமைச்சூர் கபாடி குழுமாநில செயலாளர் ஷபியுல்லா, கிருஷ்ணகிரி தலைவர் குமார், செயலர் சக்கரவர்த்தி, மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஊராட்சிமன்ற, தலைவர்கள்,, ஒன்றிய நிர்வாகிகள், தொழில் அதிபர்கள்பொதுமக்கள் கலந்து ெகாண்டனர்.
- 4 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
- சீட்டுக்கட்டுகள்,பணம் ரூ.1,500-ஐ பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டேம் போலீசார் அவதானப்பட்டி அருகேயுள்ள மாரியம்மன் கோவில்பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த உமாசங்கர்(29), தேவேந்திரன் (43), திருப்பதி (38), சக்திவேல் (34) ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் சீட்டுக்கட்டுகள்,பணம் ரூ.1,500-ஐ பறிமுதல் செய்தனர்.
- 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் விவசாயிகளும் குவிந்தனர்.
- 20 கிலோ கொண்ட ஆடு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வார வெள்ளிக்கிழமை வெள்ளிசந்தை நடைபெறு வது வழக்கம். இந்த சந்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய தனியார் சந்தையாகும்.
இந்த சந்தையில் ஞயாற்றுகிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை, சூளகிரி, பர்கூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், சேலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் குவிக்கப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க இப்பகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் விவசாயிகளும் குவிந்தனர்.
இதனால் சந்தை வியபாரம் கலைகட்டியது. இன்று சந்தையில் சுமார் 15 கிலோ கொண்ட ஆடு 10,000 முதல் 15,000 வரையும், 20 கிலோ கொண்ட ஆடு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது. அதிகபட்சமாக 1 ஆடு சுமார் 35,000 வரை விற்கப்பட்டது.இந்த வார சந்தையில் சுமார் 1Ñகோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட த்திலேயே அதிகப்படியான இந்த சந்தையில் ஆடுகள் மாடுகள் குவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்தையில கோழிகள், ஆடுகள், மாடுகள் குவிக்கப்பட்டுதால் இப்பகுதியில் பொதுமக்கள் வெள்ளம் அலைமோதியது.
- எங்கள் வீட்டை பூட்டி விட்டதால் நாங்கள் தங்க இடமின்றி தவிக்கிறோம்.
- வீட்டை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்த கிருஷ்ணப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவி விசாலினி(16) நேற்று தனது தாயுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தைக்கு பூர்வீக சொத்து பாகம் பிரித்து கொடுக்கப்பட்டது. ஆனால் உறவினர்கள் சிலர் எனது தந்தையின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தகராறு செய்து வருகிறார்கள். கடந்த வாரம் எனது தந்தையை தாக்கினார்கள். இதனால் அவரை நாங்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
மேலும் அவர்கள் எங்கள் வீட்டை பூட்டி விட்டதால் நாங்கள் தங்க இடமின்றி தவிக்கிறோம். எங்களின் துணிகள், புத்தகங்கள் வீட்டிற்குள் உள்ளது. இதனால் நானும், எனது தம்பியும் பள்ளி செல்ல முடியாமல் உள்ளோம். எனவே எங்கள் வீட்டை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுதுது எங்களை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
- மாதேஷ்(35) என்ற வாலிபர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் அகரத்தை சேர்ந்தவர் மணிபாரதி. இவர் தனது உறவினர் செல்வராஜுடன் பாலக்குடி பகுதியில் உள்ள ஒரு கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாதேஷ்(35) என்ற வாலிபர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் செல்வராஜை தாக்கியுள்ளார்.
காயமடைந்த செல்வராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மணிபாரதி தந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசை கைது செய்தனர்.
- 35 தையல் போடப்பட்டு சிகிச்சை மருத்துவர்கள் அளித்தனர்.
- போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகோஜனஅள்ளி பேரூராட்சி என்.தட்டக்கல் கிராமம் முன்னாள் ஆசிரியர் முனுசாமி மகன்கமலேசன், இவருடைய பசுமாடு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு கால்நடை மருத்துவமனை யில் சுமார் 35 தையல் போடப்பட்டு சிகிச்சை மருத்துவர்கள் அளித்தனர். இது குறித்து நாகரம்பட்டி காவல் நிலையத்தில் வெட்டு காயம் பட்ட பசுமாட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். புகாரின் போலீஸார் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஜோரோக நடந்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்தது.
- காட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் வழங்கினார்.
மத்தூர்,
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஜோரோக நடந்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்தது.
இதையடுத்து போச்சம்பள்ளி வட்டம், சந்தூர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது, அதற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த கோரி, காட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில் அதிகாரிகள் சந்தூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.
இதில் மண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசிந்திரன், துணை தலைவர் கவுசல்யா மாதேஷ், ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
- 20 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.
- பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சிக்கு 38-வது வார்டுக்குப்பட்ட ஜீவா நகர் பகுதியில் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் வெங்கட்ர மணப்பா, மண்டலத் தலைவர் ஜெயபிரகாஷ், கவுன்சிலர்கள் முரு கம்மாள் மதன், லட்சுமி ஹேமந்த்குமார், மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாநில விவசாய அணி துணை தலைவருமான டி.மதியழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றினார்.
- அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
பர்கூர்,
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அங்கிநாயனப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.7 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநில விவசாய அணி துணை தலைவருமான டி.மதியழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றினார். மேலும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், வெங்கட்டப்பன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், மாவட்ட பிரதிநிதி நாகராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






