என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வார சந்தையில் ஒரே நாளில் 2½ கோடிக்கு வர்த்தகம்
- 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் விவசாயிகளும் குவிந்தனர்.
- 20 கிலோ கொண்ட ஆடு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வார வெள்ளிக்கிழமை வெள்ளிசந்தை நடைபெறு வது வழக்கம். இந்த சந்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய தனியார் சந்தையாகும்.
இந்த சந்தையில் ஞயாற்றுகிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை, சூளகிரி, பர்கூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், சேலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் குவிக்கப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க இப்பகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் விவசாயிகளும் குவிந்தனர்.
இதனால் சந்தை வியபாரம் கலைகட்டியது. இன்று சந்தையில் சுமார் 15 கிலோ கொண்ட ஆடு 10,000 முதல் 15,000 வரையும், 20 கிலோ கொண்ட ஆடு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது. அதிகபட்சமாக 1 ஆடு சுமார் 35,000 வரை விற்கப்பட்டது.இந்த வார சந்தையில் சுமார் 1Ñகோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட த்திலேயே அதிகப்படியான இந்த சந்தையில் ஆடுகள் மாடுகள் குவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்தையில கோழிகள், ஆடுகள், மாடுகள் குவிக்கப்பட்டுதால் இப்பகுதியில் பொதுமக்கள் வெள்ளம் அலைமோதியது.






