என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூரில் அரசு மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா- மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- மாநில விவசாய அணி துணை தலைவருமான டி.மதியழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றினார்.
- அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
பர்கூர்,
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அங்கிநாயனப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.7 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநில விவசாய அணி துணை தலைவருமான டி.மதியழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றினார். மேலும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், வெங்கட்டப்பன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், மாவட்ட பிரதிநிதி நாகராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






