என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெலமங்கலம் அருகே  நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் ஆய்வு
    X

    கெலமங்கலம் அருகே நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் ஆய்வு

    • போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்குமாறு அறிவுறித்தினார்.
    • திட்டப்பணிகளை சேலம் நெடுஞ்சாலைதுறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகளை சேலம் நெடுஞ்சாலைதுறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

    இதில் முக்காசி-பாரந்தூர்-கெலமங்கலம் சாலையில் நடைப்பெற்று வரும் பணிகளின் தரம், அளவு, மற்றும் இதர தரக்கட்டுபாடு அளவுகளை ஆய்வு செய்தார்.

    மேலும் சாலை விரிவாக்கம் நடைப்பெறும் இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்குமாறு அறிவுறித்தினார். இந்த ஆய்வின்போது தேன்கனிக்கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் திருமால்செல்வன், கிருஷ்ணகிரி தரக்கட்டுபாடு உதவி பொறியாளர் ரேணுகாதேவி, மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×