என் மலர்
நீங்கள் தேடியது "செய்தி தொடர்பாளர் பேட்டி"
- உண்ணாவிரத போராட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
- ஊழல்வாதத்தை தி.மு.க. அரசு, மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும்.
ஓசூர்,
பா.ஜ.க. சார்பில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி சார்பில், ஓசூர் ராம்நகரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர்கள் மனோகர், அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
மேலும் இதில் மாநில, மாவட்ட, மண்டல, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
உண்ணாவிரத மேடையில், நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி இந்த இரண்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் ஆட்சி புரியவேண்டும் என்பது பா.ஜ.க.வின் நோக்கம். ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு இந்த இரண்டையும் கொண்டுள்ளது. குடும்ப ஆட்சி,ஊழல் ஆட்சியை எதிர்ப்பது மட்டுமின்றி, அவர்கள் கொடுத்துள்ள பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எச்சரிக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் பா.ஜ.க. இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, நேற்று முன்தினம்தமிழகம் அடங்காது, நாங்கள் பெரியார் பாதையில் செல்வோம், தனித்தமிழ்நாடு அடைந்தே தீருவோம் என்றெல்லாம் பேசியுள்ளார். அவர்கள் கருணாநிதி பாதை, அண்ணா பாதை, பெரியார் பாதை என எந்த பாதை எடுத்து வந்தாலும் சரி, இந்தியா முழுவதும் இருக்கிற, இருக்கப்போகிற பாதை, மோடி பாதை மட்டும்தான். மற்ற பாதைகளெல்லாம் மூடப்போகிறது. இந்த தீவிரவாதத்தை பிரிவினைவாதத்தை, ஊழல்வாதத்தை தி.மு.க. அரசு, மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டியின்போது கூறினார்.






