என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து 11 காட்டு யானைகள் விரட்டியடிப்பு
- 11 காட்டு யானைகளை விரட்ட தமிழக வனத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
- வனப்பகுதியில் இருந்து போடூர் பள்ளம் வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டி உள்ளனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி, சிகரளப்பள்ளி, மகாராஜகடை வனபகுதிகளில் 11 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும், பயிர்களையும் நாசம் செய்து வந்தது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்து வந்தனர். மேலும் யானைகள் உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இந்த காட்டு யானைகளை வனபகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் வனத்துறையினரை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 11 காட்டு யானைகளை விரட்ட தமிழக வனத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து போடூர் பள்ளம் வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டி உள்ளனர்.
அதனால் இப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் மீண்டும் வராதவாறு வனத்துறையினர் மீண்டும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.






