என் மலர்
கிருஷ்ணகிரி
- தளி அள்ளி ஊராட்சியில் கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது.
- ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தளி அள்ளி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா பிரேம்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனந்தன், ஊர் கவுண்டர்கள் பலராமன், முருகன்,, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ராயக்கோட்டை அருகே தீயணைப்பு துறையினரின் முகாம் நடந்தது.
- மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்கினர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிநிலையத்தின் சார்பாக தென் மேற்கு பருவமழை முன்னிட்டு, ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு மழை, வெள்ள காலங்களில் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில், நீர் சூழந்துள்ள இடங்களிலிருந்து, தங்களை எவ்வாறு பாதுகாத்துகொள்வது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர்.
ராயக்கோட்டை-சூளகிரி சாலை, ராமாபுரம் கிராமம் அருகே உள்ள தென்பென்ணை ஆற்றில், அவர்களுக்கு செயல்முறை விளக்கம், மற்றும் ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இதில் தீயாணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) செல்வம் தலைமையில் வீரர்கள் ஒத்திகை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கோனேரிப்பள்ளியில் கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது.
- ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்தில் கோனிரிபள்ளி ஊராட்சியில் மன்ற தலைவர் கோபம்மா சக்கரலப்பா தலைமையில் ரூ10,71,000 மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் புனரமைக்கும் பணிக்கு சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
- கிருஷ்ணகிரி தனியார் பள்ளி, கல்லூரி சார்பில் போராட்டம் நடந்தது.
- பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி பள்ளியில் இறந்து கிடந்தார். பள்ளி தரப்பில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் கலவரமாக மாறியது.இதில் பள்ளியில் இருந்த 20க்கும்மேற்பட்ட பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் வகுப்பறைகள் சூறையாடப்பட்டன.
சான்றிதழ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தை கண்டித்தும், பள்ளிகளுக்கும், அதில் பணியாற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நேற்று மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஆடிட்டர் கொங்கரசன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட எஸ்பி., சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அவ்வபோது தனியார் கல்வி நிறுவனங்களில் பெற்றோர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோத செயல்களை நடத்தி கொண்டு கல்வி நிறுவனங்களின் சொத்துக்களை சூறையாடி வருகிறார்கள். மேலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இலலாத நிலையில் பள்ளி நிர்வாகிகள் இருக்கிறோம். எனவே அரசு எங்களுக்கும், எங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், சொத்துக்களுக்கும், பள்ளி வாகனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து செயலாளர் ஆடிட்டர் கொங்கரசன் நிருபர்களிடம் கூறியதாவது: சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 5 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவி ஒருவர் இறந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளி சொத்துக்களை தீ வைத்து கொளுத்தி உள்ளனர். உடமைகளை திருடிச் சென்றுள்ளனர். இதனால் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேற்றைய தினம் பள்ளியில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளியில் புகுந்து திருடுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு நிறைவேற்றி உள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பதற்காக இன்றைய தினம் நாங்கள் கலெக்டர், மாவட்ட எஸ்பி&ஐ சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில துணை செயலாளர் குருஜி பாண்டியன், மாவட்ட பொருளாளர் அன்பரசன், நிர்வாகிகள் பிருத்விராஜ், பிரேம் மோகன், மாருதி ஜெயராமன், ரவிச்சந்திரன், நரேன்ராஜ், பிராங்கிளின், ஜேம்ஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரி வாகனங்களில் செஸ் போட்டி விழிப்புணர்வு செய்தனர்.
- கலெக்டர் இதை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.
இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில், வட்டார போக்குவரத்துறை சார்பில், 10க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பஸ்களில் செஸ்போட்டி விழிப்புணர்வு குறித்த ஒட்டு வில்லைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் நடைபெற்ற கோலப்போட்டியை கலெக்டர் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில், மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பொதுமக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில், வருவாய்த்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், விளையைாட்டு மேம்பாட்டு ஆணையத்துறை, வட்டார போக்குவரத்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரங்கோலி கோலப்போட்டிகள், பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி அளவிலான செஸ் போட்டிகள், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் எல்இடி வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம், விளம்பர பதாகைகள் வைக்கும் பணிகள், வருவாய்த்துறை சார்பில் வாகன பேரணி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் போட்டிகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் மாநகராட்சி, நகராட்சி சார்பில் சுவர் விளம்பரம், போக்குவரத்துறை துறை சார்பில் பள்ளி, கல்லூரி பஸ்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணிகள் என தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஏடிஎஸ்பி சங்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் காளிப்பன், பிஆர்ஓ மோகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் வட்டார விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், ஒருங்கிணைந்த சேவை மைய அலுவவர்கள் கலந்துகொண்டனர்.
- மனைவியை தீ வைத்து எரித்து கணவர் கொலை செய்தார் .
- கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அடுத்த இடையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37). வெல்டர். இவரது மனைவி திரிவேணி(27). சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவரது மனைவி திரிவேணிக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி உடலில் தீக்காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரிவேணி மேல்சி கிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். முன்னதாக திரிவேணி, போலீசாரிடம் தன்னை அடித்து, தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி கணவர் சுரேஷ் தீ வைத்ததாக மரண வாக்குமூலம் அளித்தார். அதன்படி அப்போதைய மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சுரேஷை கைது செய்தார். இவ்வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி (பொ) மோனிகா தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம்சா ட்டப்பட்ட சுரேசிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.
- மனைவி கோவித்துக்கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
- அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சரகம் எல்லையோர பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 47). இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.
இதேபோல கடந்த 17-ந்தே தியும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரிஸ்வானின் மனைவி கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த ரிஸ்வான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அக்கம்பக்கத்தினர் இது குறித்து தந்த தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் ரிஸ்வானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளியில் கட்டுரை-பேச்சு போட்டிகள் நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மையம் சார்பில், விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வாரம், ஜூலை இரண்டாவது வாரம் கொண்டாடும் வகையில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற 15 மாணவ, மாணவியரில், எம்.காவியா என்ற மாணவி முதலிடத்தையும், எஸ்.காவியா என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், ஜீவஜோதி என்ற மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பேச்சுப் போட்டியில் பங்கேற்ற 12 மாணவ, மாணவியரில் லக்சித் முதலிடத்தையும், சதீஷ்குமார் இரண்டாமிடத்தையும், மீரா மூன்றாமிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ) விஜய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பழங்குடி மக்கள் மனு கொடுத்தனர்.
- அடையாள அட்டை வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், போச்சம்பள்ளி ஒன்றிங்களுக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி, பூமாலை நகர், காரகுப்பம், ஜவுக்குபள்ளம், எம்ஜிஆர் நகர், பழனிஆண்டவர் நகர், கொத்தப்பள்ளி, காளிக்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் (இருளர்) வசித்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியில் தேன், கிழங்கு, கீரைகள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை தங்களது வாழ்வாதாரமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சிறு வனத்திற்குள் சென்று தேன், கிழங்கு, மூலிகை செடிகள் சேகரிக்க சென்று வர ஏதுவமாக அனுமதி அட்டை வழங்க வேண்டுமென என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இருளர் இன மக்கள் 150க்கும் மேற்பட்டவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தேனி, வால்பாறை, தர்மபுரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள், சிறு வனத்திற்கு சென்று வர அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. கடந்த 2019ம் ஆண்டு சிறு வன மகசூல் மீதான முகாமில் மனு அளித்தோம். அதற்கும் இதுவரை பதிலளிக்கவே இல்லை.
எனவே நாங்கள் வனப்பகுதிக்கு செல்ல அனுமதி அட்டை வழங்கி, சிறு வன மகசூல் எடுத்து சீத்தாக்காய், புளி, முலிகைகள் எடுக்க அனுமதியுடன், அடையாள அட்டை வழங்க வேண்டும். இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றனர்.
- வயிற்றுவலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- விஷம் குடித்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வண்டுபட்டி பகுதியை சேர்ந்த தம்பிதுரை என்பவரது மனைவி லட்சுமி.
தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த லட்சுமி கடந்த 12-ந்தேதி விஷம் குடித்துவிட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டுகிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 17 வயது மகள் பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
- கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள போதனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது 17 வயது மகள் பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12-ந்தேதி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
- மகன் தமிழரசன் என்பவர் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
- மகன் இறந்த துக்கத்தில் தூக்குபோட்டு தாயம்மாள் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே அஞ்செட்டி போலீஸ் சரகம் வண்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி தாயம்மாள்.
இவர்களது மகன் தமிழரசன் என்பவர் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போதிலிருந்தே தாயம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 17-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத பொது தாயம்மாள் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாயம்மாள் உயிரிழந்தார்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






