என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி   பள்ளி, கல்லூரி பஸ்களில் செஸ்போட்டி விழிப்புணர்வு
    X

    கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரி பஸ்களில் செஸ்போட்டி விழிப்புணர்வு

    • கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரி வாகனங்களில் செஸ் போட்டி விழிப்புணர்வு செய்தனர்.
    • கலெக்டர் இதை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.

    இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில், வட்டார போக்குவரத்துறை சார்பில், 10க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பஸ்களில் செஸ்போட்டி விழிப்புணர்வு குறித்த ஒட்டு வில்லைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் நடைபெற்ற கோலப்போட்டியை கலெக்டர் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறுகையில், மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பொதுமக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில், வருவாய்த்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், விளையைாட்டு மேம்பாட்டு ஆணையத்துறை, வட்டார போக்குவரத்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரங்கோலி கோலப்போட்டிகள், பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி அளவிலான செஸ் போட்டிகள், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் எல்இடி வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம், விளம்பர பதாகைகள் வைக்கும் பணிகள், வருவாய்த்துறை சார்பில் வாகன பேரணி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் போட்டிகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் மாநகராட்சி, நகராட்சி சார்பில் சுவர் விளம்பரம், போக்குவரத்துறை துறை சார்பில் பள்ளி, கல்லூரி பஸ்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணிகள் என தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஏடிஎஸ்பி சங்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் காளிப்பன், பிஆர்ஓ மோகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் வட்டார விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், ஒருங்கிணைந்த சேவை மைய அலுவவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×