என் மலர்
கிருஷ்ணகிரி
- செந்திலாவை ஆபாச வார்த்தையில் திட்டி,சரமாரியாக தாக்கியுள்ளார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மணிவண்ணணை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது36). இவரது அண்ணன் மனைவி செந்திலா (40).
இந்த நிலையில் நேற்று மணிவண்ணன், செந்திலாவை ஆபாச வார்த்தையில் திட்டியும், சரமாரியாகவும் தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இது குறித்து செந்திலா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மணிவண்ணணை கைது செய்தனர்.
கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- விநாயகர் சிலைகளை ராயக்கோட்டை, கர்நாடகா பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறார்.
- விநாயகர் சிலைகள் 1 அடியில் இருந்து 15 அடி உயரம் வரை உள்ளது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் ஓசூர்-சூளகிரி சாலையில் கேசவன் காம்பிளஸ்சில் சப்படியை சேர்ந்த வியாபாரி லோகேஷ் என்பவர் விநாயகர் சிலைகளை ராயக்கோட்டை, கர்நாடகா பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறார்.
விநாயகர் சிலைகள் 1 அடியில் இருந்து 15 அடி உயரம் வரை உள்ளது. தரத்திற்கு ஏற்றார்போல் ரூ.100 -ல் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் தாத்தா இறந்துள்ள நிலையில் மாணவன் மனமுடைந்து காணப்பட்டார்.
- ஒரு அறையில் கயிற்றில் தூக்குபோட்டு கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்துள்ள தொட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது17). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் தாத்தா இறந்துள்ளார். இதனால் மாணவன் மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று வழக்கம் போல் அவர் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் விடுதிக்கு திரும்பிய நிலையில் சக மாணவர்களுடன் பேசாமல் இருந்துள்ளார். இரவு விடுதியில் உள்ள ஒரு அறையில் கயிற்றில் தூக்குபோட்டு கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அைடந்தனர்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
- 7 பேர் கஞ்சா விற்றுபோலீசாரிடம் சிக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட னர்.
நாகரசம்பட்டி, கந்திகுப்பம், ஊத்தங்கரை, பர்கூர், சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பூனம்மாள் (வயது 60), கார்த்திக் (21), தேவபிரகாஷ் (52), வாசுகி (45), ராஜா (60), ஆசிக் (25) ஆகிய 7 பேர் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தபோது போலீசாரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கட்சி யினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
ஓசூர்,
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வருகிற செவ்வாய்கிழமை ( 9-ந் தேதி) கிருஷ்ணகிரி வருகிறார்.
மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஓசூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கட்சி யினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
மேலும் இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்னகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் வாசுதேவன், அசோகா, ராஜி, மஞ்சுநாத், மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தம் ரெட்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சந்திரன், வட்ட செயலாளர் சங்கர் என்ற குபேரன், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, பகுதிகளின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- முதற்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
- அடுத்தடுத்த நாட்களில் மற்ற பிரிவுகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.இதில் சிறப்பு பிரிவினரான முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 50 மாணவிகள் கலந்து கொண்டனர். வரும், 10-ந் தேதி பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்தியல், மின்னணுவியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பிரிவுகளுக்கும், 11-ந் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற பிரிவுகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.
கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாணவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டையும் எடுத்து வரவேண்டும் என்றும், மேலும் விவரங்க ளுக்கு அந்தந்த கல்லூரி முதல்வரை அணுகலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
ஓசூர்,
மத்திய பா.ஜ.க. அரசு, அரிசி, பால்,தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதித்திருப்பதை கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாதேஷ், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திடீரென கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 2,020 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.
- வெள்ளநீர் ஆர்ப்பரித்து, கரைபுரண்டு ஓடுகிறது.
ஓசூர்,
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், ஓசூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, 3-வது நாளாக அதிகரித்துள்ளது.. நேற்று முன்தினம் (வியா ழக்கிழமை), அணைக்கு வினாடிக்கு 1,370 கனஅடிநீர் வந்த நிலையில், நேற்று, 839 கனஅடி நீர் அதிகரித்து, வினாடிக்கு 2,209 கனஅடி நீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்புக் கருதி, 2,020 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) வினாடிக்கு 2,757 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 2,820 கனஅடி நீர் அணையில் உள்ள 7 மதகுகளின் வழியாக திறந்து விடப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து, கரைபுரண்டு ஓடுகிறது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28அடிகளில், 42.48 அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கர்நாடகா மாநில ஆற்றங்கரையோர தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுகள், கெலவரப்பள்ளி அணை நீரில் கலந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறி ரசாயன நுரை குவியல், குவியலாக பொங்கி காற்றில் பறப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் சிப்காட் போலீசார் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ 1 லட்சத்து 90,000 மதிப்புள்ள 238 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு அந்த குட்கா பொருட்களை கடத்திவந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து அதனையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான காரையும் பறிமுதல் செய்து, டிரைவர் மகாராம் ( 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் மத்திகிரி போலீசார், பூனப்பள்ளி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனையிட்டனர். அதில் ரூ. 9,51,000 மதிப்புள்ள 779 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக சேலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பொருட்களையும், ரூ.15 லட்சம் மதிப்பிலான லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், சேலம் மாவட்டம் காடையம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் அங்கதுரை (39) என்பவரையும், ஓமலூர் பகுதியை சேர்ந்த பாலன் என்பவரையும் கைது செய்தனர்.
- மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.
- அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தன.
கிருஷ்ணகிரி,
ஆடி மாதத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.
அதன்படி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தன. அம்மன் பல்வேறு மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன், காய்கறி அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
அதே போல், புதுப்பேட்டை ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தன.
அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டன. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
- சிறுவர் பூங்கா அருகே மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு.
கிருஷ்ணகிரி,
முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 9-ந் தேதி சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை செல்ல உள்ளார். இவரை கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
இதற்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் சமரசம், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் முனிவெங்கடப்பன், மாவட்ட துணை செயலா ளர்கள் கலைச்செல்வி, சாகுல்அமீத், பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசினார். முடிவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலன் நன்றி கூறினார்.
- கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1042 கனஅடியாக இருந்தது.
- 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. குறிப்பாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1042 கனஅடியாக இருந்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2209 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 42.64 அடியில் 42.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் 2020 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் அலியாளம், எண்ணேகொல்புதூர் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. இதே போல், வேப்பனப்பள்ளி அருகே கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரும், கிருஷ்ணகிரி அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 6300 கனஅடி வந்துக் கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை 5735 கனஅடியாகவும், பிற்பகலில் 4760 கனஅடியாக சரிந்தது. இதனால் அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 7549 கனஅடியில் இருந்து 5100 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 49.40 அடிக்கு தண்ணீர் உள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இரவில் யாரும் ஆற்றைக் . கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அணையின் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.






