என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரிகளில் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது
  X

  கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரிகளில் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதற்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
  • அடுத்தடுத்த நாட்களில் மற்ற பிரிவுகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.இதில் சிறப்பு பிரிவினரான முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
  அதன்படி கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 50 மாணவிகள் கலந்து கொண்டனர். வரும், 10-ந் தேதி பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்தியல், மின்னணுவியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பிரிவுகளுக்கும், 11-ந் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற பிரிவுகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.

  கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாணவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டையும் எடுத்து வரவேண்டும் என்றும், மேலும் விவரங்க ளுக்கு அந்தந்த கல்லூரி முதல்வரை அணுகலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×