என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • சிறுவர் பூங்கா அருகே மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு.

    கிருஷ்ணகிரி,

    முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 9-ந் தேதி சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை செல்ல உள்ளார். இவரை கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    இதற்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் சமரசம், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் முனிவெங்கடப்பன், மாவட்ட துணை செயலா ளர்கள் கலைச்செல்வி, சாகுல்அமீத், பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசினார். முடிவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலன் நன்றி கூறினார்.

    Next Story
    ×