என் மலர்
கிருஷ்ணகிரி
- பணம்,செல்போன்,ஏ.டி.எம்.கார்டு முதலியவற்றை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
- குருபரப்பள்ளி போலீசார் மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் சரகம் குந்தாரப்பள்ளி என்ற இடத்தருகே தனியார் நிறுவன லாரியை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 36) என்பவர் ஒட்டி சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து லாரியை மறித்த 3 மர்மநபர்கள் தினேஷ்குமாரை கீழே இறக்கி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் பணம்,செல்போன்,ஏ.டி.எம்.கார்டு முதலியவற்றை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க, பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:-
அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை (ஆக. 9) சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை செல்கிறார்.
காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
எனவே இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளைக்கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
- ரூ.21,62,000- அளவில் நகை கடனை மோசடியாக வாங்கியுள்ளதாக கூறப்படு கிறது.
- ரூ.17,82, 251- பணம் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்த வெங்கடேசன் மறுத்து விட்டாராம்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வடமலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.வெங்கடேசன் (38). இவர், ஓசூர் அருகே நவதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில், அவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.21,62,000/- அளவில் நகை கடனை மோசடியாக வாங்கியுள்ளதாக கூறப்படு கிறது. இதனை வங்கி மேலாளர் டி. வெங்கடேசன் (30) கண்டுபிடித்து, மதிப்பீட்டாளரிடம் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து அவர், ஒரு பகுதி தொகையை வங்கிக்கு செலுத்தினார். மேலும் ரூ.17,82, 251- பணம் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்த வெங்கடேசன் மறுத்து விட்டாராம்.
இதையடுத்து வங்கி மேலாளர், மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- இரவில் யாரும் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணை களுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. குறிப்பாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1042 கனஅடியாக இருந்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2209 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 42.64 அடியில் 42.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து
பாசன கால்வாய்கள், ஆற்றிலும் 2020 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் அலியாளம், எண்ணே கொல்புதூர் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. இதே போல், வேப்பனப்பள்ளி அருகே கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரும், கிருஷ்ணகிரி அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 6300 கனஅடி வந்துக் கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை 5735 கனஅடியாகவும், பிற்பகலில் 4760 கனஅடியாக சரிந்தது. இதனால் அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 7549 கனஅடியில் இருந்து 5100 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 49.40 அடிக்கு தண்ணீர் உள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இரவில் யாரும் ஆற்றைக் . கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்ப ணித்துறை யினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.
மேலும், அணையின் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அதிக தண்ணீர் காரணமாக டைவ் அடித்த அரவிந்த் தண்ணீரின் சுழற்சியில் சிக்கியுள்ளார்.
- தீயணைப்பு துறையினர் சுமார் 6 கி.மீ. தூரம் வரை தேடினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சமேடு தெண்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.
இவ்வாற்றிற்கு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு காரணங்களுக்காக நீராட வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று தருமபுரி காந்திநகர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (27) என்பவர் தனது நண்பரின் தந்தையின் ஈமச்சடங்கிற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார்.
கிருஷ்ணக்கிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் குளிப்பதாக சென்ற அரவிந்த் பழைய பாலத்தில் இருந்து டைவ் அடித்ததாக கூறப்படுகிறது. அதிக தண்ணீர் காரணமாக டைவ் அடித்த அரவிந்த் தண்ணீரின் சுழற்சியில் சிக்கியுள்ளார்.
டைவ் அடித்து உள்ளே சென்றவர் மீண்டும் வராததால் உறவினர்கள் அச்சமடைந்து, போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கும், பாரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு துறை அலுவலர் (பொ) சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சுமார் 6 கி.மீ. தூரம் வரை தேடினர்.
இதுவரை அரவிந்த் எங்கும் கிடைக்காததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து இன்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
- கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.
- இந்த பூமி பூஜைக்கு தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் முனிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஒன்றியத்தில் சிம்பல்திராடி ஊராட்சிக்கு உட்பட்ட மருதேவரபனப்பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.
இந்த பூமி பூஜைக்கு தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் முனிசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தேவி வெங்கடேஷ்ராஜ், பஞ்சாயத்து துணை தலைவர் சீனிவாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இன்று காலை முதல் சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.
- பெய்த மழையால் ஏரி, குளங்கள் மற்றும் அணை பகுதிகளில் மழைநீர் வரத்து அதிகரித்து வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரமான பேரிகை, காளிங்காவரம், அத்தி முகம், சிம்பல் திராடி, மாரண்டப்பள்ளி, மைதாண்டப்பள்ளி, அத்திமுகம், காமன்தொட்டி, உத்தனப்பள்ளி , உலகம், சென்னப்பள்ளி, மேலுமலை, வேம்பள்ளி ஆகிய இடங்களில் சில வாரங்களாக கன முதல் லேசான மழை பெய்து வருகிறது.
இன்று காலை முதல் சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து பெய்தது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஏரி, குளங்கள் மற்றும் அணை பகுதிகளில் மழைநீர் வரத்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவி வருகிறது.
- தாய்ப்பாலில் உள்ள வெள்ளை அணுக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
- முறையான கர்ப்பகால பராமரிப்புடன் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், உலக தாய்ப்பால் வாரவிழாவை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா-2022 "தாய்ப்பால் அளிப்பதை உயர்த்துவோம் கற்பிப்போம் ஆதரிப்போம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவை யான ஊடடச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரி விகிதத்தில் அமைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
குழந்தையின் சிறப்பான, ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பான கூடுதல் உணவு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தாய்ப்பால் மற்றும் கூடுதல் உணவு முறையாக பெற்ற குழந்தைகள் மெலிவுத்தன்மை, எடைக்குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கி யமான குழந்தையாக வளருவார்கள்.
குழந்தைகளின் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தாய்ப்பால் ஊட்டச்சத்தே அடித்தளமாகும். தாய்ப்பால் கொடுப்பதினால் கண் பார்வைக்கு தேவையான வைட்டமின்-ஏ சத்து கிடைக்கிறது. தாய்ப்பாலில் உள்ள வெள்ளை அணுக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
எனவே, முறையான கர்ப்பகால பராமரிப்புடன் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேப் போல் இளம் வயது திருமணம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இளம் வயது திருமணத்தால் தாய்சேய் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. பெண்ணுக்கு 21 வயதிற்கு மேல் திருமணம் செய்வது மற்றும் தேவையான ஊட்டச்சத்து உட்கொள்வதால் தாய் ேசய் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) டாக்டர்.வெங்கடேசன், தாசில்தார் நீலமேகன், வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர். இனியால் மண்டோதரி, டாக்டர்.சுசித்ரா மற்றும் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர்.
- 75 வது சுதந்திர பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- முகாமினை கல்லூரி நிறுவனர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ஊத்தங்கரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, நேசம் தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை உடன் இணைந்து இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமினை கல்லூரி நிறுவனர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் ஊத்தங்கரை ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மருத்துவர் தேவராசு, துணை தலைவர் ராஜா, நேசம் தொண்டு நிறுவனத்தின் செயலர் குணசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் மருத்துவ கல்லூரி குருதி வங்கி அலுவலர் மருத்துவர் வசந்தகுமார், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் மதன்குமார், மருத்துவர் விமலா, சுகாதார மேற்பார்வையாளர் சந்தோஷ் குமார், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வெங்கடேஷ், மருத்துவமனை ஆய்வகவியலார் ரியாஸ் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்நிகழ்வில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 அலகுகள் இரத்தம் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பார்த்திபன், திருமுருகன், பிரபு, ஆனந்தி, கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.
- மர்ம நபர்கள் காரை மறித்து கடத்தினர்.
- சிறிது தூரம் சென்ற உடன் கோவிந்தராஜை இறக்கி விட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது35). இவர் மத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மத்தூரில் இருந்து காவேரிப்பட்டணம் செல்வதற்காக திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிட்டோபனஅள்ளி என்ற இடத்தின் அருகே வந்த போது மர்ம நபர்கள் காரை மறித்தனர். பின்னர் கோவிந்தராஜை மற்றொரு காரில் கடத்தி சென்றனர். பின்னர் சிறிது தூரம் சென்ற உடன் கோவிந்தராஜை இறக்கி விட்டனர்.
இது குறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை மாணவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் இணைந்து சுத்தம் செய்தனர்.
- கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் மற்றும் மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு "அசாதி கா அம்ரித் மகோத்சவ்" என்ற பெயரில், குளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கடந்த 1-ந் தேதி தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நேற்று, தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை மாணவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் இணைந்து சுத்தம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இக்கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கோலம், மன விளையாட்டு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளை, கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் மற்றும் மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- 138 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- நசாத்திகலாம், அவுதாகலாம் ஆகிய 2 இருவரையும் ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் புகையிைல பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் 5 ரோடு பகுதியில் உள்ள பெட்டிகடையில் சோதனை செய்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. கடையின் உரிமையாளர் தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 138 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ஓசூரில் புகையிலை பொருட்கள் பெட்டிக்கடையில் வைத்திருந்ததாக நசாத்திகலாம், அவுதாகலாம் ஆகிய இருவரையும் ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்தனர்.






