search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்வரத்து அதிகரிப்பால்   தென்பெண்ணை ஆற்றில் குளிக்க, துணி துவைக்க செல்லக்கூடாது
    X

    நீர்வரத்து அதிகரிப்பால் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க, துணி துவைக்க செல்லக்கூடாது

    • ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • இரவில் யாரும் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணை களுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. குறிப்பாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1042 கனஅடியாக இருந்தது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2209 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 42.64 அடியில் 42.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து

    பாசன கால்வாய்கள், ஆற்றிலும் 2020 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் அலியாளம், எண்ணே கொல்புதூர் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. இதே போல், வேப்பனப்பள்ளி அருகே கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரும், கிருஷ்ணகிரி அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.

    கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 6300 கனஅடி வந்துக் கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை 5735 கனஅடியாகவும், பிற்பகலில் 4760 கனஅடியாக சரிந்தது. இதனால் அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 7549 கனஅடியில் இருந்து 5100 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 49.40 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இரவில் யாரும் ஆற்றைக் . கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்ப ணித்துறை யினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

    மேலும், அணையின் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×