என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரியில்  குப்பைகள் அகற்றும் பணி
    X

    அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரியில் குப்பைகள் அகற்றும் பணி

    • கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை மாணவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் இணைந்து சுத்தம் செய்தனர்.
    • கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் மற்றும் மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஓசூர்,

    இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு "அசாதி கா அம்ரித் மகோத்சவ்" என்ற பெயரில், குளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கடந்த 1-ந் தேதி தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படவுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று, தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை மாணவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் இணைந்து சுத்தம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இக்கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கோலம், மன விளையாட்டு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளை, கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் மற்றும் மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×