என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதேவரபனப்பள்ளி கிராமத்தில்  கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி
    X

    கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்த காட்சி.

    மருதேவரபனப்பள்ளி கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி

    • கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.
    • இந்த பூமி பூஜைக்கு தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் முனிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஒன்றியத்தில் சிம்பல்திராடி ஊராட்சிக்கு உட்பட்ட மருதேவரபனப்பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.

    இந்த பூமி பூஜைக்கு தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் முனிசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தேவி வெங்கடேஷ்ராஜ், பஞ்சாயத்து துணை தலைவர் சீனிவாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×