என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரியில் ரத்தத்தான முகாம்"

    • 75 வது சுதந்திர பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • முகாமினை கல்லூரி நிறுவனர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ஊத்தங்கரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, நேசம் தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை உடன் இணைந்து இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    முகாமினை கல்லூரி நிறுவனர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

    கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் ஊத்தங்கரை ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மருத்துவர் தேவராசு, துணை தலைவர் ராஜா, நேசம் தொண்டு நிறுவனத்தின் செயலர் குணசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் மருத்துவ கல்லூரி குருதி வங்கி அலுவலர் மருத்துவர் வசந்தகுமார், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் மதன்குமார், மருத்துவர் விமலா, சுகாதார மேற்பார்வையாளர் சந்தோஷ் குமார், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வெங்கடேஷ், மருத்துவமனை ஆய்வகவியலார் ரியாஸ் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்நிகழ்வில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 அலகுகள் இரத்தம் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பார்த்திபன், திருமுருகன், பிரபு, ஆனந்தி, கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.

    ×