என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 2,757கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
  X

   கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர் ஆர்ப்பரித்து, கரைபுரண்டு ஓடுவதை படத்தில் காணலாம்.

  ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 2,757கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2,020 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.
  • வெள்ளநீர் ஆர்ப்பரித்து, கரைபுரண்டு ஓடுகிறது.

  ஓசூர்,

  கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், ஓசூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, 3-வது நாளாக அதிகரித்துள்ளது.. நேற்று முன்தினம் (வியா ழக்கிழமை), அணைக்கு வினாடிக்கு 1,370 கனஅடிநீர் வந்த நிலையில், நேற்று, 839 கனஅடி நீர் அதிகரித்து, வினாடிக்கு 2,209 கனஅடி நீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்புக் கருதி, 2,020 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.

  இன்று (சனிக்கிழமை) வினாடிக்கு 2,757 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 2,820 கனஅடி நீர் அணையில் உள்ள 7 மதகுகளின் வழியாக திறந்து விடப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து, கரைபுரண்டு ஓடுகிறது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28அடிகளில், 42.48 அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே, கர்நாடகா மாநில ஆற்றங்கரையோர தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுகள், கெலவரப்பள்ளி அணை நீரில் கலந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறி ரசாயன நுரை குவியல், குவியலாக பொங்கி காற்றில் பறப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  Next Story
  ×