என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    • தண்ணீரில் ஏராளமாக மீன்களும் சென்றதால் அவற்றைப் பிடிக்க இளைஞர்கள் குவிந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியான படேதாள ஏரி நேற்று முன்தினம் நள்ளிரவில் நிரம்பியது.

    இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி கால்வாய்கள் வழியாக, கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.

    3 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதால், கிராம மக்கள் நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    மேலும் காலையில் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரில் ஏராளமாக மீன்களும் சென்றதால் அவற்றைப் பிடிக்க இளைஞர்கள் குவிந்தனர்.

    இந்த நிலையில், படேதாள ஏரியில் இருந்து பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல, அமைத்திருந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கால்வாயில் முட்புதர்கள் நிறைந்து, மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதனை இன்னும் சீரமைக்காததால், தண்ணீர் சிறிது தூரம் சென்று மீண்டும் ஏரிக்கே திரும்பி வந்ததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே போர்க்கால அடிப்படையில் கால்வாயை சீரமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 43 கல்லூரிகளில் படிக்கும் 2401 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 43 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்து வரும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த 2,401 மாணவிகளுக்கு மாதாந்திரம் ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதாந்திர உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.

    எனவே, மாணவி கள் உயர்கல்வி உறு தித்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையை தங்களது மேல்படிப்பை முடித்து, விருப்பமான பணியில் சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்வர் நபிஷாபேகம் நன்றி கூறினார்.

    • 5 ஆடுகளில் 2 ஆடுகளை காணவில்லை.
    • விற்க முயன்ற ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயுடு குருகு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமலேசன் (வயது 60).விவசாயியான இவர் தனது வீட்டில் 5 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு ஆடுகளை வீட்டில் கொண்டு வந்து கட்டிப்போட்டார். பின்னர் தூங்கச்சென்று விட்டார்.

    திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது 5 ஆடுகளில் 2 ஆடுகளை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து மத்தூர் போலீசில் கமலேசன் புகார் செய்தார். இந்நிலையில் ஊத்தங்கரையில் நடந்த ஆட்டுச்சந்தையில் கமலேசன் வீட்டில் திருடு போன 2 ஆடுகளை ஒரு மர்ம ஆசாமி விற்க முயன்றது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ஆடுகளை மீட்டு விற்க முயன்ற ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் கோடலவலசல் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 53 ) என்பதும், ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • விவசாயமும் செய்ய முடியவில்லை, ஆடுமாடுகளும் மேய்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    சூளகிரி அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உரிய அனுமதியின்றி கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெடி மருத்துக்களை பயன்படுத்தி பாறைகள் வெடிகள் வைத்து உடைக்கப்படுகிறது. இதனால் எங்கள் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், கிராம சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது கிரானைட் கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஆகியவை ராட்சத டிப்பர் லாரிகளில் எடுத்து செல்லப்படுவதால் விவசாயமும் செய்ய முடியவில்லை, ஆடுமாடுகளும் மேய்க்க முடியாத நிலை ஏற்படுகிறது, சில நேரங்களில் வேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் விபத்தினை தடுத்து நிறுத்திடவும், கொலை மிரட்டல் விடுக்கும் குவாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரிய பேருந்து வசதி இல்லாததால் குழந்தைகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி கொண்டு செல்லும் அவல ஏற்பட்டுள்ளது.

    வேப்பனபள்ளி

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடுத்தரை கிராமத்தில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் வேப்பன பள்ளி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த தடத்தாரை கிராம பேருந்து நிலையத்திலிருந்து குருவரெட்டிபோரூர், இனம் குட்டப்பள்ளி,எம்ஜிஆர் நகர் ஆகிய நான்கு கிராம பள்ளி குழந்தைகளும் வேப்பனபள்ளி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை பள்ளிக்கு செல்லும் நேரத்திற்கு உரிய பேருந்து வசதி இல்லாததால் குழந்தைகளின் கூட்டம் அதிகமாக உள்ளது இதனால் இப்பகுதியில் 3 பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவ மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருகின்றனர். மேலும் சில நாட்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சாலைகளை இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி கொண்டு செல்லும் அவல ஏற்பட்டுள்ளது.

    மேலும் பள்ளி நேரத்திற்கு உரிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவி மாணவிகள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் செல்லும் காட்சி பகுதியில் பொதுமக்களின் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.

    பள்ளிக்கு செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    • அலைந்து, திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்தார்.
    • 10 ரூபாய் நாணயங்களை தரையில் பரப்பி, எண்ணும் பணியில் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ஓசூர், 

    ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜீவ் (30). இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

    இவர் நீண்ட நாட்களாக, புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பினார். இந்த நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் பேருந்துகளில் வாங்க மறுப்பதால், அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை செல்லுபடியாக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், தான் விரும்பும் மோட்டார் சைக்கிளுக்கான தொகையை 10 ரூபாய் நாணயமாக வழங்கித்தான் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார். இதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக நண்பர்கள் சாதிக், யுவராஜ் ஆகியோருடன் மாவட்டம் முழுவதும் அலைந்து, திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்தார்.

    பின்னர் நேற்று அவற்றை 8 பைகளில் கட்டிக்கொண்டு, ஓசூர் ரிங்ரோடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு வந்தார். அங்கு நிர்வாகிகளிடம் விவரத்தை கூறியதும் அவர்கள் வியப்படைந்தனர். மேலும் அவர்கள் நாணயங்களை பெற்றுக் கொண்டு, மோட்டார் சைக்கிளை வழங்கவும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து, பைகளில் இருந்த 10 ரூபாய் நாணயங்களை தரையில் பரப்பி, எண்ணும் பணியில் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    3 மணி நேரம் எண்ணப்பட்டு, அதில் தவணைத்தொகை ரூ.1,80,000- இருந்ததையும்,, மீதித்தொகையை லோன் மூலம் வழங்க ராஜீவ் உறுதியளித்ததையும் ஏற்றுக் கொண்டு, ஷோரூம் நிர்வாகத்தினர் புதிய ரக நவீன வடிவமைப்பு கொண்ட மோட்டார் சைக்கிளை அவரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்டு ராஜீவ் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார். இந்த ருசிகர சம்பவத்தால் ஷோரூம் பகுதியில் கலகலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

    • பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.
    • சமூக ஆர்வலர்களும் , பொதுமக்களும் மிகவும் பாராட்டினர்.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம் ராம்நகர் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கன மழை காரணமாக, ராம்நகர் பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டும், வீடுகள் சேதமடைந்தும் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள காருபலா கிராமத்தில் இயங்கி வரும், தாருல் உலூம் ஹாஷ்மியா என்ற தனியார் கல்வி அறக்கட்டளையினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும்வகையில் அதன் நிறுவனர் டாக்டர் இதாயத் ஷேக் தலைமையில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை, மினிலாரி மூலம் சூளகிரியிலிருந்து, ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் ராம்நகருக்கு நேற்று கொண்டு சென்றனர்.முன்னதாக, ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இதாயத் ஷேக்" சாதி, மத பேதமின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

    தமிழகத்தில் இருந்து வெள்ள நிவாரண பொருட்களை, பாதிக்கப்பட்ட கர்நாடக மக்களுக்காக கொண்டு சென்ற, கல்வி அறக்கட்டளையினரின் மனித நேயத்தை, சமூக ஆர்வலர்களும் , பொதுமக்களும் மிகவும் பாராட்டினர்.

    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர்கள் சீனிவாசன், ஜெயந்திசம்பத் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர்கள் சீனிவாசன், ஜெயந்திசம்பத் ஆகியோர் தலைமை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் மோகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வேப்பனஹள்ளி முன்னாள் எம்.எல்.ஏ., பி.முருகன், கலந்துக்கொண்டு பிளஸ் 2 படிக்கும், 634 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சின்னராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் நாகராஜ், கோபால், தொழில் அதிபர் ஆர். எம்.முனிரத்தினம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அரியப்பன், கணேசன், அவைத்தலைவர் ஜெயராமன், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர்கள் குஜ்ஜப்பன், கிருஷ்ணன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கஞ்சப்பன், பெரியசாமி, பி.டி.எ. நிர்வாதிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் சந்திரன் நன்றி கூறினார்.

    • ஆசிரியர் தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
    • பாராட்டி நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ஓசூர், 

    ஆசிரியர் தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, ஓசூரில் மாநகராட்சி கல்விக்குழு சார்பில் அரசு ஆர்.விஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப், உருது மேல்நிலைப்பள்ளி, முல்லை நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் புருஷோத்தம ரெட்டி, யசஸ்வினி மோகன், மோசின் தாஜ் நிசார் அகமது உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், மேலாண்மைக்குழு துணைத் தலைவர் ஏஜாஸ் அகமது, தி.மு.க. பகுதி செயலாளர் ராமு, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியையர் ,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவின்போது, மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை பாராட்டி நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    • அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலை மீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
    • திரளான குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    ஓசூர் :

    ஓசூர் அருகே அரசனட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஹரியம்மா, ஸ்ரீ கரியம்மா, ஸ்ரீ ஆனகோண்ட்லம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷேக விழா, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, கோயில் கமிட்டி மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக, சம்பன்னி சாமி, அஜ்ஜய்யா சாமி, ஆனேலிங்கேஷ்வரா சாமி, அகதூர் சாமி, முகலூரு வீரபத்திர சாமி, ஒசராய சாமி, சித்தேஸ்வர சாமி, சிக்கம்மா தொட்டம்மா தேவிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் சிலைகள் மேள, தாள முழக்கத்துடன், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்னே செல்ல, சாமி சிலைகள் ஊர்வலமாக அருகில் உள்ள மைதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலை மீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.

    இதில், ஓசூர், சூளகிரி பகுதிகளிலிருந்தும், பெங்களூரு பகுதியிலிருந்தும் திரளான குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கமிட்டி தலைவர் காந்தராஜ், செயலாளர் மாதேஷ் என்கிற மகாதேவன், மல்லிகா, வீரபத்திரப்பா, வெங்கடேஷ் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.3 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை ரூ.10 நாணயங்களை கொடுத்து வாங்கினார்.
    • 8 மூட்டைகளில் இருந்த ரூ.10 நாணயங்களை 3 மணி நேரமாக எண்ணினர்.

    ஓசூர்

    ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 30). இவர் அங்குள்ள தனியார் கிளினிக்கில் நிர்வாக இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்க எண்ணினார். அதன்படி ஓசூரில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு சென்றார். அப்போது அவர் 8 மூட்டைகளில் கொண்டு வந்த ரூ.10 நாணயங்களை ஷோரூம் ஊழியர்களிடம் வழங்கி, மோட்டார் சைக்கிளை வாங்கினார்.

    இதுகுறித்து வாலிபர் ராஜீவ் கூறுகையில், பொதுமக்களிடம் ரூ.10 நாணயங்கள் வாங்கும் பழக்கம் குறைந்துள்ளது. எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரூ.3 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை ரூ.10 நாணயங்களை கொடுத்து வாங்கினேன். இதற்காக எனது நண்பர்கள் சாதிக், யுவராஜ் ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்கு சென்று நாணயங்களை சேகரித்தேன் என்றார்.

    இதையடுத்து ஷோரூம் ஊழியர்கள் 8 மூட்டைகளில் இருந்த ரூ.10 நாணயங்களை 3 மணி நேரமாக எண்ணினர். அதில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. மோட்டார் சைக்கிளுக்கான மீதி தொகை ராஜீவ் தவணையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    • கூலி தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
    • போதையிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொல்லனகான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா வயது 30).

    கூலி தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் எப்போதுமே மது போதையில் இருந்து வந்த எல்லப்பா அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் படுத்து தூங்கினார்.

    போதையிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. இது குறித்து எல்லப்பாவின் குடும்பத்தினர் தந்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×