search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பனபள்ளி அருகே   பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவ, மாணவிகள்
    X

    பள்ளிக்கு பேருந்தில் செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் தினறும் காட்சி.

    வேப்பனபள்ளி அருகே பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவ, மாணவிகள்

    • உரிய பேருந்து வசதி இல்லாததால் குழந்தைகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி கொண்டு செல்லும் அவல ஏற்பட்டுள்ளது.

    வேப்பனபள்ளி

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடுத்தரை கிராமத்தில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் வேப்பன பள்ளி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த தடத்தாரை கிராம பேருந்து நிலையத்திலிருந்து குருவரெட்டிபோரூர், இனம் குட்டப்பள்ளி,எம்ஜிஆர் நகர் ஆகிய நான்கு கிராம பள்ளி குழந்தைகளும் வேப்பனபள்ளி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை பள்ளிக்கு செல்லும் நேரத்திற்கு உரிய பேருந்து வசதி இல்லாததால் குழந்தைகளின் கூட்டம் அதிகமாக உள்ளது இதனால் இப்பகுதியில் 3 பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவ மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருகின்றனர். மேலும் சில நாட்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சாலைகளை இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி கொண்டு செல்லும் அவல ஏற்பட்டுள்ளது.

    மேலும் பள்ளி நேரத்திற்கு உரிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவி மாணவிகள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் செல்லும் காட்சி பகுதியில் பொதுமக்களின் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.

    பள்ளிக்கு செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    Next Story
    ×