என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப் பெண் திட்டத்தின் கீழ்  கல்லூரி மாணவிகள் 2,401 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை   -கலெக்டர், ஆணைகளை வழங்கினார்
    X

    பர்கூரில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கிய போது எடுத்த படம். அருகில் எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன் மற்றும் பலர் உள்ளனர்.

    புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகள் 2,401 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை -கலெக்டர், ஆணைகளை வழங்கினார்

    • உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 43 கல்லூரிகளில் படிக்கும் 2401 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 43 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்து வரும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த 2,401 மாணவிகளுக்கு மாதாந்திரம் ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதாந்திர உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.

    எனவே, மாணவி கள் உயர்கல்வி உறு தித்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையை தங்களது மேல்படிப்பை முடித்து, விருப்பமான பணியில் சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்வர் நபிஷாபேகம் நன்றி கூறினார்.

    Next Story
    ×