என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் குடிப்பழக்கத்தால் உயிரிழந்த கூலி தொழிலாளி
- கூலி தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
- போதையிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொல்லனகான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா வயது 30).
கூலி தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் எப்போதுமே மது போதையில் இருந்து வந்த எல்லப்பா அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் படுத்து தூங்கினார்.
போதையிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. இது குறித்து எல்லப்பாவின் குடும்பத்தினர் தந்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






