என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பொன்விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

    மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சமரசம், முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சில் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது. அ.தி.மு.க., பொன்விழா நிறைவு மற்றும் 51-&ம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க., அரசை கண்டிப்பது. அண்ணாவின் கொள்கைக்கு எதிராக இந்துக்களை இழிவாக பேசி வரும் தி.மு.க., எம்.பி., ராசாவை வன்மையாக கண்டிப்பது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்குச் சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் கல்பனா, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மக்பூல், மாவட்ட மீனவரணி செயலாளர் புகழேந்தி, மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகில் தக்கடி-உஸ்தலஹள்ளி சாலையில் உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்இ-ன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, கலைச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ அளவிலான, 20 மூட்டைகளில், ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் இருந்த மல்லஹள்ளி சிவராஜ் (25), உதுபரணி பாக்கியம் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் போச்சம்பள்ளி அடுத்த எருமம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மரத்தடியில், 50 கிலோ அளவிலான, 14 மூட்டைகளில், 700 கிலோ ரேஷன் அரிசியுடன் நின்ற 2 பேரை சோதனை செய்தனர். அதில் அவர்கள் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசி கடத்திய சின்னகொத்தூர் முருகேசன் (33), இனாம்கோட்டப்பள்ளி முருகேசன் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூரில், மாநகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஓசூர் - பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கி, கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை உற்சாகமாகவும், சிறப்பாகவும் கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தி கூட்டத்தில் பேசினார்.

    மேலும் இதில், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் எம்.அசோகா, பி.ஆர் வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், கூட்டுறவு சங்க தலைவர் கே.சாக்கப்பா, ஒன்றிய செயலாளர்கள் ஹரீஷ் ரெட்டி, ரவிகுமார், வட்ட செயலாளர் குபேரன் என்ற சங்கர் மற்றும் தேவன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை (சனிக்கிழமை) முதல் பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சை தொடங்கு கிறது.
    • தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தொடங்கி வைக்கிறார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    இங்கு நாளை (சனிக்கிழமை) முதல் பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சை தொடங்கு கிறது. இதை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் மருத்துவ மனையில் நோயாளி களுக்கு தேவையான வசதிகள் முறைப்படத் தப்பட்டுள்ளதா என்றும், விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கங்கள், உள்நோயாளி சிகிச்சை வார்டுகள், தீவிர, அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள வார்டுகளில் மருத்துவ சேவை தொடங்குவது குறித்த முன்னேற்பாடு பணிகளை தமிழக மருத்துவதுறை கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆய்வு செய்தார்.

    அவரிடம் சுமார், 700 படுக்கை, நவீன மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவகுழுவினர் தெரிவித்தனர். அப்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்கீதா, துணை முதல்வர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வி, உதவி உள்ளிருப்பு மருத்துவர் மது, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக அலுவலர்கள் சரவணன், வேலுமணி, பொதுப்பணித்துறை, மின்வாரிய துறையினர், செவிலியர்கள், அலுவலர் கள் உடனிருந்தனர்.

    • ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது.
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கன்பத் (வயது 23) என்பவரை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள சிச்சுருகானப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது.

    மைசூரிலிருந்து சேலத்துக்கு அவை கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காருடன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கன்பத் (வயது 23) என்பவரை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

    • இரண்டு மணி நேரம் போராடி காளை மாட்டை மீட்டனர்.
    • இது போன்ற சம்பவம் தொடர் கதையாக உள்ளது.

    ஒசூர், 

    ஒசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ராஜ கால்வாயில் இன்று காளை மாடு ஒன்று விழுந்திருப்பதை கண்ட பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

    இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நிலை அலுவலர் மாது தலைமையிலான குழுவினர் இரண்டு மணி நேரம் போராடி காளை மாட்டை மீட்டனர்.

    இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை தின்பதற்காக வரும் கால்நடைகள், தவறி ராஜகால்வாயில் விழுந்து விடுகின்றன. இது போன்ற சம்பவம் தொடர் கதையாக உள்ளது.

    • மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய சிவாவை நேற்று கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள நல்லபாடி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த மாணவிக்கும், பர்கூர் அடுத்த மூலமகுடு பகுதியை சேர்ந்த சிவா (வயது26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சிவா ஆசை வார்த்தை கூறி மாணவிஏமாற்றப்பட்டு தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். அந்த மாணவியை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய சிவாவை நேற்று கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வனங்கள் தொடர்பான பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • பயனுள்ள வகையிலும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் நடைபெற்று வரும் இந்த கண்காட்சி 12-ந் தேதி (நேற்று), முடிவடைவதாக இருந்த நிலையில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "ஓசூர் வனக்கோட்டத்தில், வன உயிரின வார விழாவினை கொண்டாடும் வகையில், வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்,பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2-ந் தேதி முதல், மாவட்ட வன அலுவலக வளாகத்தில் வன உயிரின கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை பார்ப்பதற்கு முன்பாக, பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் வீடியோக்கள் மூலமாகவும், பவர்பாயிண்ட் மூலமும் அனுபவமுள்ள வன அலுவலர்களால் விளக்கம் தரப்படுகிறது. மேலும் இந்த கண்காட்சியில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறுத்தைகளின் உருவ பொம்மைகள், பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள யானைக்கன்று, மான் கன்றுகள் யானையின் மண்டை ஓடு, மற்றும் பல்வேறு வகையான வன விலங்குகளின் அரிய புகைப்படங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அடங்கிய வரைபடங்கள், மனித யானை மோதல்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் சாதனங்கள், சிறுவன மகசூல் பொருட்கள், மர வகைகள் மற்றும் வனங்கள் தொடர்பான பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    பயனுள்ள வகையிலும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் நடைபெற்று வரும் இந்த கண்காட்சி 12-ந் தேதி (நேற்று), முடிவடைவதாக இருந்த நிலையில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓசூர் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் மத்திகிரி அருகேயுள்ள மாவட்ட வன அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட் இந்த கண்காட்சியை அனைவரும் இலவசமாக கண்டு ரசித்து செல்லலாம்". இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில், வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்
    • பெருமாள், போகனபள்ளியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேரை கந்திகுப்பம் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்துள்ள ஒபிகுப்பம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது பணம் வைத்து சூதாடியதாக குருவிநாயனப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணன், விஜயன், சின்னதம்பி, பெருமாள், போகனபள்ளியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேரை கந்திகுப்பம் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சிவகாமி (வயது38). இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகாமில் முதியோர் உதவித்தொகை மற்றும் பட்டா மாறுதல், இலவச பட்டா, ஊனமுற்றோர் இருசக்கர வாகனம் வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், காட்டகரம் பஞ்சாயத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி மற்றும் அனைத்து துறைகளின் திட்டங்களை செயல்படுத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் முதியோர் உதவித்தொகை மற்றும் பட்டா மாறுதல், இலவச பட்டா, ஊனமுற்றோர் இருசக்கர வாகனம் வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கௌசல்யா மாதேஷ், சண்முகம், புனிதாசங்கர், நித்யா சரவணன், பிரபு, தருமன், பாலமுருகன், வேலு முன்னிலை வகித்தனர். பர்கூர் பிடிஓ வெங்கட்ராமகணேஷ் முகாமை தொடங்கி வைத்தார். ஆர்.ஐ., லதா, வி.ஏ.ஓ., சரவணன், வேளாண்மை துறை வல்லரசு, தோட்டக்கலை துறை ரமேஷ், சுகாதார துறை சரவணன், கால்நடை மருத்துவர் லதா, சீனிவாசன், குமார், முருகேசன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் நன்றி உரை ஆற்றினார்.  

    ×