என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் பொதுமக்கள் மனு அளித்த போது எடுத்த படம்.
சந்தூரில் சிறப்பு முகாம்
- முகாமில் முதியோர் உதவித்தொகை மற்றும் பட்டா மாறுதல், இலவச பட்டா, ஊனமுற்றோர் இருசக்கர வாகனம் வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.
- முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், காட்டகரம் பஞ்சாயத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி மற்றும் அனைத்து துறைகளின் திட்டங்களை செயல்படுத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் முதியோர் உதவித்தொகை மற்றும் பட்டா மாறுதல், இலவச பட்டா, ஊனமுற்றோர் இருசக்கர வாகனம் வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கௌசல்யா மாதேஷ், சண்முகம், புனிதாசங்கர், நித்யா சரவணன், பிரபு, தருமன், பாலமுருகன், வேலு முன்னிலை வகித்தனர். பர்கூர் பிடிஓ வெங்கட்ராமகணேஷ் முகாமை தொடங்கி வைத்தார். ஆர்.ஐ., லதா, வி.ஏ.ஓ., சரவணன், வேளாண்மை துறை வல்லரசு, தோட்டக்கலை துறை ரமேஷ், சுகாதார துறை சரவணன், கால்நடை மருத்துவர் லதா, சீனிவாசன், குமார், முருகேசன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் நன்றி உரை ஆற்றினார்.






