என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஓசூர்,

    தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலி தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர், தளி ஒன்றிய சங்கத்தின் சார்பில், ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் நஞ்சுண்ட ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனிவாசன் தொடக்க உரையாற்றினார்.

    ஒன்றிய செயலாளர் வெங்கடகிரியப்பா, குணவதி சீனிவாசலு, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.துரை ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

    முடிவில், ஒன்றிய பொருளாளர் ராஜண்ணா நன்றி கூறினார். இதில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • செப்டிக் டேங்க் உள்ள பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மாணவ, மாணவியரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களின் பெற்றோருக்கு தைரியம் அளித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செப்டிக் டேங்கில் விஷவாயு கசிந்து மாணவ மாணவியர் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் உடனடியாக பள்ளி வளாகத்திற்கு வந்த மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, பள்ளி வளாகம், வகுப்பறை, செப்டிக் டேங்க் உள்ள பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் செப்டிக் டேங்கில் கசிவு ஏற்பட்டு விஷ வாயு பரவியதே மாணவ, மாணவியரின் பாதிப்புக்கு உண்மையான காரணம். மேலும் செப்டிக் டேங்க் அருகிலேயே எலி ஒன்று செத்து கிடந்தது. குப்பைகள் மக்கியும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் மாணவ, மாணவியருக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று நிருபர்களிடம் கூறினார்.

    பின்னர், விளையாட்டு மைதானத்தில் தங்கியிருந்த மாணவ, மாணவியர் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களின் பெற்றோருக்கு தைரியம் அளித்தார்.

    அப்போது, ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • சமீபத்தில் தி.மு.க. கொடி கம்பம் நடப்பட்டது.
    • விபத்துகள் எற்பட வாய்ப்புகள் உள்ளதாக சமுக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    சூளகிரி

    ஒசூர்- சூளகிரி தேசிய நெடுஞ்சாலை சூளகிரி நுழைவு வாயில் பகுதியில் சமீபத்தில் தி.மு.க. கொடி கம்பம் நடப்பட்டது. பின்பு அதை அறிந்த பா.ஜனதா கட்சியினர் அந்த கம்பத்தை விட உயரமாக புதிய கொடிக்கம்பம் அமைத்தனர்.

    இதை பார்த்த அ.தி.மு.க.வினர் எல்லாவற்றிலும் மிக உயரமாக இரட்டைஇலை சின்னம் ,சிலை அமைத்து வருகின்றனர். காஷ்மீர் முதல் கண்ணியா குமரி செல்லும் சாலை ஒரமாக இந்த கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.

    கண் இமைக்கும் நேரத்தில் இந்த கம்பங்கள் காற்றிலோ அல்லது வேறு ஏதோ காரணத்தால் கீழே விழும் நிலை ஏற்பட்டால் பெரிய விபத்துகள் எற்பட வாய்ப்புகள் உள்ளதாக சமுக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    • கிருத்திகா எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
    • கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சத்தியநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் கிருத்திகா (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதே பகுதியில் உள்ள கிணறு வழியாக நடந்து சென்ற கிருத்திகா எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மயக்கம் அடைந்து விட்டார்கள்.
    • கண்காணிப்பில் உள்ளனர். எனவே, பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.

    ஓசூர்

    ஓசூரில் மாநகராட்சி அரசு பள்ளியில் விஷவாயு பரவி மாணவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நேற்று நேரில் நடத்திய ஆய்வுக்கு பின்னர், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓசூர் மாநகராட்சி காமராஜ் காலனியில் உள்ள அரசு நடுநிடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மயக்கம் அடைந்து விட்டார்கள்.

    இந்த தகவலின் அடிப்படையில், 72 குழந்தைகள், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 22 குழந்தைகள், பெற்றோருடன் பாதுகாப்பான நிலையில், அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1 குழந்தை மட்டும் முன்னெச்சரிக்கையாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து, ஓசூர் உதவி கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விசாரணை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டு, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவர்கள் நலமுடன் உள்ளனர். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். எனவே, பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, சுற்றுச்சூழல் பொறியாளர் ரங்கசாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பள்ளி வளாகத்திற்குள் விஷ வாயு பரவியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள அரசு பள்ளியில் இன்று மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அடுத்தடுத்து மாணவர்கள் மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓசூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    பள்ளி வளாகத்திற்குள் விஷ வாயு பரவியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனை முன்பாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
    • டீ கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விற்பனையை தொடங்கி வைத்தார்

    காவேரிபட்டனம், 

    காவேரிப்பட்டணம் அரசமர தெருவை சார்ந்த பிரகாஷ் தானும் தன் குடும்பமும் ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே எனக்கு ஒரு டீக்கடை அமைத்து கொடுத்தால் அதை வைத்து நான் என் குடும்பத்தை நடத்திக் கொள்வேன் என காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    அதனை ஏற்று காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் காவேரிப்பட்டணம் விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் ஒரு கடையை தன் சொந்த பணத்தில் இருந்து அட்வான்ஸ் கொடுத்து பிரகாசுக்கு டீ கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விற்பனையை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் கோகுல்ராஜ், நித்யா முத்துக்குமார், தமிழ்செல்வி சோபன்பாபு, மற்றும் சிவப்பிரகாசம் மாருதி முருகன், மற்றும் பலர் கலந்து கொடுத்தனர் .இது குறித்து பிரகாஷ் கூறுகையில் நான் வறுமையின் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருந்தேன். இது குறித்து காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் முறையிட்டேன். உடனடியாக அவர் எனக்கு டீக்கடை அமைத்துக் கொடுத்ததற்கு அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

    • தரமான விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும்.
    • விதைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் எழிலரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தரமான விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். விதையின் தரம் என்பது விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிறரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இத்தர நிர்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். ஒரு பயிருக்கு தேவையான பயிர் எண்ணிக்கை பராமிக்க நல்ல முளைப்புத்திறன் இருத்தல் வேண்டும்.

    நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதைகளை உபயோகிக்கும் போது தேவையான விதையை மட்டும் விதைப்பதால் விதை செலவு குறைகிறது. புறத்தூய்மை பரிசோதனையில் பிறப் பயிர் விதை மற்றும் களை விதை ஆகிய கலப்புகள் உள்ளதா என கண்டறியப்படுவதால், விதையின் இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை காப்பாற்றப்படுகிறது.

    விதைகளை சேமிக்கும் போது பூச்சி நோய் தாக்குதலால் முளைப்புத்திறன் கெடாமல் நீண்ட நாட்கள் சேமிக்க விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருத்தல் கூடாது. அதனால் விதைகளின் முளைப்புத் திறனைக் காக்க விதை பரிசோதனை மூலம் ஈரப்பதம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

    எனவே, விதை விற்பனையாளர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், தங்களிடம் உள்ள விதைகளில் விதை மாதிரிகள் எடுத்து, முகப்புக் கடிதத்துடன் பரிசோதனை கட்டணமாக ஒரு மாதிக்கு ரூ.80 என்ற விகிதத்தில் செலுத்தி, விதைப் பரிசோதனை நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, தங்கள் விதைகளின் தரங்களை அறிந்து கொள்ளவும். தாங்கள் அனுப்பிய விதைகளின் பரிசோதனை முடிவுகளை 30 நாட்களுக்குள் தங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.
    • தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு - தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப்பா துகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

    இந்த விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து (http://labour.tn.gov.in)பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

    ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து, சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர்கள் தொழிற் சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம் 0230-00 Labour and Employment 800 Other Receipts – AG Receipts of Labour Department (DP Code No.0230 00 800 AG 22799 என்ற தலைப்பின் கீழ் https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan வலைதளத்தில் இ-செலான் மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
    • ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறவுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாவட்ட மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பையும் மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி, ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை எதிரில், நாளை( சனிக்கிழமை) காலை 9 மணியளவில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பேரூர் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளை செயலாளர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப் பாட்டத்தினை சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம் என்று கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக அனைத்து உரங்களும் தேவையான அளவு சங்கங்களில் இருப்பு உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் அடிப்படையிலும் கடன் பெறாத விவசாயிகளுக்கு ரொக்க விற்பனை அடிப்படையிலும் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    எனவே விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி சாகுபடிக்கு தேவையான உரங்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் கூட்டுறவு சங்கங்களில் உரம் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம் ஆகிய வட்டாரங்கள் கட்டுப்பாட்டு அறை எண் 7338720527&ல் ஓசூர் சரக துணை பதிவாளரை தொடர்பு கொள்ளவும்.

    கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப் பள்ளி மற்றும் மத்தூர் ஆகிய வட்டாரங்கள் கட்டுப்பாட்டு அறை எண் 7338720526-ல் கிருஷ்ணகிரி சரக துணை பதிவாளரை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.
    • செல்லகுமார் எம்.பி. தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு செல்லகுமார் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சிகள், மின்சாரத் துறை, பேரூராட்சிகள், வேளாண்மைத்துறை, வனத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பணிகள், முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கூட்டத்தில் செல்லகுமார் எம்.பி. பேசியதாவது:-

    மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் உரிய பயனாளிகளுக்கு செனறடைய வேண்டும். மேலும் கட்டுமான பணிகள் விரைவாகவும், தரமாகவும் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குனர் ஈஸ்வரன், உதவி கலெக்டர்கள் சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), தேன்மொழி (ஓசூர்), ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, ஒன்றிய குழு தலைவர்கள் அம்சாராஜன் (கிருஷ்ணகிரி), விஜயலட்சுமி (மத்தூர்), சரோஜினி (வேப்பனப்பள்ளி), லாவண்யா ஹேம்நாத் (சூளகிரி), கேசவமூர்த்தி (கெலமங்கலம்) சசி வெங்கடேஷ் (ஓசூர்) மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×