என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செப்டிக் டேங்க் கசிந்து விஷவாயு பரவியதே  மாணவர்களின் பாதிப்புக்கு உண்மையான காரணம்  -முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேட்டி
    X

    அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி,மாணவ, மாணவியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களின் பெற்றோருக்கு தைரியம் அளித்தார். 

    செப்டிக் டேங்க் கசிந்து விஷவாயு பரவியதே மாணவர்களின் பாதிப்புக்கு உண்மையான காரணம் -முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேட்டி

    • செப்டிக் டேங்க் உள்ள பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மாணவ, மாணவியரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களின் பெற்றோருக்கு தைரியம் அளித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செப்டிக் டேங்கில் விஷவாயு கசிந்து மாணவ மாணவியர் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் உடனடியாக பள்ளி வளாகத்திற்கு வந்த மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, பள்ளி வளாகம், வகுப்பறை, செப்டிக் டேங்க் உள்ள பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் செப்டிக் டேங்கில் கசிவு ஏற்பட்டு விஷ வாயு பரவியதே மாணவ, மாணவியரின் பாதிப்புக்கு உண்மையான காரணம். மேலும் செப்டிக் டேங்க் அருகிலேயே எலி ஒன்று செத்து கிடந்தது. குப்பைகள் மக்கியும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் மாணவ, மாணவியருக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று நிருபர்களிடம் கூறினார்.

    பின்னர், விளையாட்டு மைதானத்தில் தங்கியிருந்த மாணவ, மாணவியர் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களின் பெற்றோருக்கு தைரியம் அளித்தார்.

    அப்போது, ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×