என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் -பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறுகிறது
- மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
- ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறவுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாவட்ட மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பையும் மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி, ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை எதிரில், நாளை( சனிக்கிழமை) காலை 9 மணியளவில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பேரூர் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளை செயலாளர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப் பாட்டத்தினை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.






