என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் கொடி கம்பம் அமைப்பதில் கட்சியினர் போட்டா போட்டி
- சமீபத்தில் தி.மு.க. கொடி கம்பம் நடப்பட்டது.
- விபத்துகள் எற்பட வாய்ப்புகள் உள்ளதாக சமுக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சூளகிரி
ஒசூர்- சூளகிரி தேசிய நெடுஞ்சாலை சூளகிரி நுழைவு வாயில் பகுதியில் சமீபத்தில் தி.மு.க. கொடி கம்பம் நடப்பட்டது. பின்பு அதை அறிந்த பா.ஜனதா கட்சியினர் அந்த கம்பத்தை விட உயரமாக புதிய கொடிக்கம்பம் அமைத்தனர்.
இதை பார்த்த அ.தி.மு.க.வினர் எல்லாவற்றிலும் மிக உயரமாக இரட்டைஇலை சின்னம் ,சிலை அமைத்து வருகின்றனர். காஷ்மீர் முதல் கண்ணியா குமரி செல்லும் சாலை ஒரமாக இந்த கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.
கண் இமைக்கும் நேரத்தில் இந்த கம்பங்கள் காற்றிலோ அல்லது வேறு ஏதோ காரணத்தால் கீழே விழும் நிலை ஏற்பட்டால் பெரிய விபத்துகள் எற்பட வாய்ப்புகள் உள்ளதாக சமுக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Next Story






