என் மலர்
கிருஷ்ணகிரி
- காவல் நிலைய செயல் பாடுகள் குறித்து அறிந்தனர்.
- படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சூளகிரி,
சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் சூளகிரி காவல் நிலைத்திற்கு சென்று காவல் நிலைய செயல் பாடுகள் கூறித்து அறிந்தனர்.
காவல் ஆய்வாளர் ரஜினி மாணவர்களிடம் அங்கு காவல் நிலையத்தில் அரசு விதி முறைகளையும், சட்ட திட்டம் குறித்தும் விவரித்து கூறினார். மாணவர்களுக்கு குடி, போதை, , கஞ்சா, திருட்டு, அடிதடி, கொலை,குற்றங்களில் ஈடுபடாமலும் மற்றும் நன்கு படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர்கள் மனோகரன், வெங்கடேஷ் மற்றும் காவலர்கள், ஆசிரியர்கள்,என்.எஸ்.எஸ். ஆசிரியர் கணேசன் , மற்றும் ஆசியர்கள் மாதேஷ்வரன், விஜயக்குமார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- சுசீலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மனமுடைந்த கோபால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள காந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுசிலா (வயது 37).டைலர் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல பதிப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் குணமாக வில்லை. இதில் மனமுடைந்த சுசீலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ஒசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த கோபால் (28) என்ற விவசாயி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த கோபால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை மாரப்பன் தந்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழாவை யொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அடவ னப்பள்ளி கிராமத்தில், சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாய சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும், புதிதாக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்தும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக விழாவை யொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.
பின்னர், புனித நீர் கொண்ட குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுரத்தின் மீது இருந்த கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், சாமிக்கு மகா தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, பிரபாகர் ரெட்டி, பாகலூர் ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
- ஐ.வி.டி.பி. நிறுவனமானது கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான கல்விச் சேவையை ஆற்றி வருகிறது.
- ரூ.19,520 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்களை ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி கவுரவித்தார்.
கிருஷ்ணகிரி,
மகளிர் முன்னேற்றத்தில் வெற்றி கண்டுள்ள ஐ.வி.டி.பி. நிறுவனமானது கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான கல்விச் சேவையை ஆற்றி வருகிறது. கல்வி ஊக்கப்பரிசுகள், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி பயில உதவித்தொகைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் வழங்குவது, ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் அமைக்க உதவி புரிதல் போன்ற பல பணிகளைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில், கல்வியில் மட்டுமில்லாமல் அனைத்து செயல்பாடு களிலும் முதன்மை மாணவர் களாகவும், சிறந்த மாணவர்களாகவும் திகழும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட கல்வி குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 11-ம் வகுப்பு மாணவி தேஜா ஸ்ரீ மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சச்சின் சந்துரு ஆகிய இருவருக்கும் தலா.ரூ.19,520 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்களை ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி கவுரவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஷ்வரி முன்னிலையில் விருதை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி. நிறுவனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் மாணவ, மாணவியர் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
- ஏரி பகுதியில் அமைத்த ஆழ்துளை கிணறுகள் மூழ்கியது.
- 3-க்கும் மேற்பட்ட ஆழ் துளை கிணறு ஒரே நாளில் அமைத்து குடிநீர் வழங்கினார்.
சூளகிரி,
சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி பல கிராமங்களை கொண்ட பெரிய ஊராட்சி. இந்த ஊராட்சியில் உத்தனப்பள்ளி, கனசந்திரம், கூடுமாக்கனப்பள்ளி, லட்சிம்புரம், என பல கிராமங்கள்களுக்கு 5-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் வழங்கி வந்தனர்.
தற்போது 2 மாதங்களாக தொடர் மழையால் ஏரிகள்,குட்டைகள் நிரம்பியதால் ஏரி பகுதியில் அமைத்த ஆழ்துளை கிணறுகள் மூழ்கியது.
இதனால் உத்தனபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி காந் அரசு திட்ட பணிகள் மூலம் 3-க்கும் மேற்பட்ட ஆழ் துளை கிணறு ஒரே நாளில் அமைத்து குடிநீர் வழங்கினார்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகியையும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சேர்மன், கவுன்சிலர், பொறியாளர், மேற்பார்வையாளர், ஒப்பந்ததாரர் தங்கமணி ஆகியோரை பாராட்டி கனசந்திரம் பகுதி கிராம மக்கள் பூஜை செய்து ஆடு வெட்டி விருந்து அளித்தனர்.
- பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 17). இவர் கப்பல்வாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம், பள்ளியில் சக மாணவர் தாக்கியதில், வலிப்பு ஏற்பட்டு கோபிநாத் உயிரிழந்தார். அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று பெற்றோரி டம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவரின் உடலுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அவர், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட அவை தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட ராயக்கோட்டை வன சரக அலுவலர்கள் முயன்று வருகின்றனர்.
- சின்னசாமியின் அலறலை கேட்ட அக்கம்பக்கம் இருந்த விவசாயிகள் ஓசை எழுப்பி யானையை விரட்டினர்.
சூளகிரி,
சூளகிரி அருகேயுள்ள மேலுமலை பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றி வந்தன. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட ராயக்கோட்டை வன சரக அலுவலர்கள் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியை ஒட்டியுள்ள சாமல்பள்ளம் சின்னகானப்பள்ளி பகுதியில் விவசாய நிலம் வைத்துள்ள சின்னசாமி (வயது 50) என்பவர் தனது வயலுக்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த காட்டு யானை சின்னசாமியை பயங்கரமாக தாக்கியது. சின்னசாமியின் அலறலை கேட்ட அக்கம்பக்கம் இருந்த விவசாயிகள் ஓசை எழுப்பி யானையை விரட்டினர்.பின்னர் சின்னசாமியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் உள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை விவசாயி களும்,பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
- அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் குரூப்-1 போட்டித் தேர்வு நடந்தது.
- கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் குரூப்-1 போட்டித் தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 தேர்வு மையங்களில் தேர்வு எழுத மொத்தம் 5 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வை 3 ஆயிரத்து 134 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 378 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குந்தாரப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 19 மையங்களில் தேர்வு நடந்தது.
இந்த தேர்வை கண்காணிக்க 19 முதன்மை கண்காணிப்பாளர்களும், 2 பறக்கும் படையினரும், 6 நடமாடும் அலகுகளும், 19 ஆய்வு அலுவலர்கள், 20 வீடியோகிராபர்கள், 6 ஆயுதம் ஏந்திய போலீசார், 19 தேர்வு கூட காவலர்கள் என மொத்தம் 91 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் தொகுதி&1 போட்டி தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என அனைத்து விதமான அடிப்படை வசதிகளும், சிறப்பு நடமாடும் மருத்துவ குழுவும் தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோபிநாத்தை தாக்கிய மாணவனை பிடித்து விசாரித்தனர்.
- சேலத்தில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சக்கில் நத்தம் அருகே உள்ளது கப்பல் வாடி . இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 -ம் வகுப்பு அறிவியல் பிரிவு படிக்கும் 2 மாணவர்கள் தைலம் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த விளை யாட்டின்போது ஒரு மாணவர் மற்றொரு மாணவனின் நெற்றியில் தைலம் தடவி உள்ளான். இதனால் மாணவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் பள்ளியின் சமையல் அறை அருகே அடுப்பு எரிக்க வைக்கப்பட்டு இருந்த தென்னம் பாளையை எடுத்து கோபிநாத் என்ற மாணவனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த கோபிநாத் தாக்கப்பட்ட அதே வேகத்தில் அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார். அவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்கப்பட்ட அதிர்ச்சியில் வலிப்பு நோய் ஏற்பட்டு மாணவன் கோபிநாத் துடித்துள்ளார். இதையடுத்து சக மாண வர்கள் நடந்த சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் கூறி உள்ளனர். உடனே அவர்கள் மாணவனை அங்கி ருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு மாணவன் கோபிநாத்தின் உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை தாக்கிய மாணவனை பிடித்து விசாரித்தனர். பின்னர் சேலத்தில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மாணவன் கோபிநாத்தின் வீடும், அவனை தாக்கிய மாணவனின் வீடும் அருகருகே உள்ளது.இதனால் அந்த கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் பர்கூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- கொத்தூர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் இருந்தது.
- ஒன்றரை கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருடக்ள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1,362 ஆகும்.
சூளகிரி,
சூளகிரி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளை கொத்தூர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் இருந்தது.
போலீசார் அந்த காரை திறந்து சோதனை செய்த போது அதில் ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள 370 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களும், ரூ.4 ஆயிரத்து 800 மதிப்புள்ள கர்நாடக மாநில 48 மதுபாட்டில்களும் இருந்தன. அவற்றையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற நபரை சோதனை செய்தனர்.
அதில் அவர் ஒன்றரை கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருடக்ள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1,362 ஆகும். அதை வைத்திருந்த கோவை பேரூர் சுண்டகாமுத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
இதே போல ஊத்தங்கரையில் 4 ரோடு, கொண்டம்பட்டிபுதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கோணம்பட்டி ரவி (49), கொண்டம்பட்டிபுதூர் பத்மா (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 பாக்கெட் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.
- அவர்களை மடக்கி பிடித்த போலீசார் சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள பெரிய தள்ளப்பாடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது அப்பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடித்த சிங்காரப்பேட்டை போலீசார் அவர்களி டமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.600 பணத்தையும் பறிமுதல் செய்தனர். பணம் வைத்து சூதாடியதாக திருப்பதி (வயது 33), மாதேஷ் (35), கார்த்திக்மணி (27), லட்சுமணன் (36), முருகன் (40) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
- ரூ.1.5 லட்சம் மதிப்பிலான மின்மோட்டார்கள், இரும்பு பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
- 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நெடுங்கல் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 35). இவர் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று நிறுவனத்தின் உள்ளே புகுந்த மர்ம கும்பல் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான மின்மோட்டார்கள், இரும்பு பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.இதுகுறித்து காவேரி பட்டணம் போலீசில் கந்தன் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது அதே நிறுவனத்தில் வேலைபார்த்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தப்பட்ட ஹரீஷ் (வயது 22), ஆனந்தன் (21), ஆபாஷ் (20) ஆகிய 3 பேர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர்.






